பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் கிளாரன்ஸ் சீடோர்ஃப் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்!

Share this News:

நெதர்லாந்து (05 மார்ச் 2022): பிரபல நெதர்லாந்து கால்பந்து நட்சத்திரமான கிளாரன்ஸ் சீடோர்ஃப் வெள்ளிக்கிழமை இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக அறிவித்தார்.

இன்ஸ்டாகிராமில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், “உலகெங்கிலும் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக இஸ்லாத்தின் அர்த்தத்தை இன்னும் ஆழமாக எனக்குக் கற்பித்த எனது அபிமான [மனைவி] சோபியா [மக்ரமதி]க்கு மிக்க நன்றி” என தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் எனது பெயரை மாற்றவில்லை. என் பெற்றோர் எனக்கு சூட்டிய கிளாரன்ஸ் சீடோர்ஃப் என்ற பெயரைத் தொடர்ந்து வைத்திருப்பேன். நான் என் அன்பை உலகில் உள்ள அனைவருக்கும் உரித்தாக்குகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மிகச்சிறந்த கால்பந்து வீரரான கிளாரன்ஸ் சீடோர்ஃப், பல்துறையிலும் தேர்ந்த வீரர். இவர்  1996, 2000, 2004-ல் மூன்று UEFA ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  அவர் 1998 FIFA உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ளார்.

மேலும்  கிளாரன்ஸ் சீடோர்ஃப்,  யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.


Share this News:

Leave a Reply