முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து!

Share this News:

ஐதராபாத் (26 மே 2020): முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீன் தனது ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நேற்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் பட்டது. கொரோனா பரவலை தடுக்க நான்காவது கட்ட லாக்டவுன் அமலில் இருப்பதால் ரம்ஜான் நோன்பு காலங்களிலேயே முஸ்லிம்கள் தொழுகையை வீட்டிலேயே தொழுது கொண்டனர்.

இந்நிலையில் நேற்றைய பெருநாள் கொண்டாட்டமும் வீடுகளிலேயே கொண்டாடப் பட்டது. மேலும் பெருநாள் தொழுகையையும் வீட்டிலேயே தொழுது கொண்டனர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீன் உலக மக்களுக்கு தனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.


Share this News: