சாதனை மேல் சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

Share this News:

கராச்சி (14 டிச 2021): டி 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரே ஆண்டில் அதிக வெற்றிகள் பெற்று சாதனை படைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று கராச்சி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன், முதலில் பந்து வீச விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது வெஸ்ட் இண்டீஸ். 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, நடப்பு (2021) ஆண்டில் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 18 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது

இதற்கு முன்னதாக ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் 17 வெற்றிகளை பெற்றது பாகிஸ்தான் அணியின் முந்தைய சாதனையாக இருந்தது. வேறு எந்த அணியும் இந்த சாதனையைப் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply