சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் போக்குவரத்து எல்லையை திறக்கிறது!

துபாய் (09 ஜன 2021): சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் நாட்டின் கடல், நிலம் மற்றும் விமான போக்குவரத்து எல்லையை சனிக்கிழமை திறக்கிறது. சவூதி அரேபியாவின் அல் உலாவில் நடந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) கூட்டத்தில் கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது. இந்நிலையில் கத்தார் உடனான வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகளை ஐக்கிய அரபு அமீரகமும் நாளை மீண்டும் தொடங்குகிறது. இந்த முடிவை…

மேலும்...

சவூதி கத்தார் எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு – குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்!

ரியாத் (04 ஜன 2020): சவூதி மற்றும் கத்தார் இடையே தரை மற்றும் வான்வழி போக்குவரத்து மீண்டும் திறக்கப்படவுள்ளதாக குவைத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் நாசர் அல்-சபா திங்களன்று தெரிவித்தார். சவூதி மற்றும் கத்தார் எல்லைகளை திறக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக குவைத் அமைச்சர் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.  

மேலும்...

கத்தாரில் கோவிட் 19 தடுப்பூசி போடப்படும் பணி டிசம்பர் 23 முதல் தொடக்கம்!

தோஹா (22 டிச 2020): கத்தாரில் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் கட்டம் (புதன்கிழமை) நாளை தொடங்கும் என்று கத்தார் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகள் முதல் கட்டமாக, நாளை டிசம்பர் 23 துவங்கி ஜனவரி 31 வரை துரிதமாக போடப்படும். முதல் கட்ட தடுப்பூசிகள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசிகள் நாடு முழுவதும் உள்ள ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம்…

மேலும்...

கத்தார் நாட்டில் பண மதிப்பிழப்பு ( Demonetisation) குறித்த புதிய அறிவிப்பு!

தோஹா (14 டிச 2020): கத்தாரில் பண மதிப்பிழப்பு ( Demonetisatio) குறித்த புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் டிசம்பர் 18 2020 முதல், படத்தில் உள்ள புதிய ரியால் நோட்டுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன. இது, கத்தார் அரசு வெளியிடும் ஐந்தாவது Banknote series ஆகும். இதற்கு முன் 2003 இல், நான்காவது Series வெளியிட்ட சமயம் நன்றாக நினைவிருக்கிறது. அரசு பணமதிப்பழிப்பு பற்றி அறிவித்ததும், அதைத் தொடர்ந்து மக்களுக்கு எவ்வித…

மேலும்...

கோவிட் தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்! கத்தார் அரசு அதிரடி அறிவிப்பு

தோஹா (06 நவம்பர் 2020): கொரோனா வைரஸுக்கான நிவாரண தடுப்பூசி, கத்தார் நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் முற்றிலும் இலவசம் என்று கத்தார் அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. கத்தார் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் (Ministry of Public Health) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இச் செய்தி இடம் பெற்றுள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகளுக்காக புகழ் பெற்ற Pfizer மற்றும் BioNTech நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது கத்தார். Pfizer நிறுவனம் நடத்திவரும் தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகள், இம்மாத இறுதியில்…

மேலும்...

செப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு!

தோஹா (18 ஆக 2020): வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் பருவகால காய்ச்சலுக்கான இலவசத் தடுப்பூசி மற்றும் அடுத்த சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி இடப்படும் என்று கத்தார் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவை நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஷேக் முகமது பின் ஹமத் அல்தானி, தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், கோவிட்-19…

மேலும்...
Qatar tops In Corona Cure 1

கொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை!

கத்தார் (18 ஜூலை,2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் புதியதொரு சாதனையை படைத்துள்ளது. அந்நாட்டில் தற்பொழுது வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் 96 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளிலேயே சவூதி அரேபியாவிற்கு அடுத்த படியாக அதிகளவு கொரோனா பாதிப்பைக் கொண்டிருந்த நாடு கத்தார் ஆகும். மற்ற வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமான் போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் 50,000 க்கும் அதிகமான…

மேலும்...

கத்தாரில் மரணமடைந்த தமிழரின் உடலை நல்லடக்கம் செய்த இந்தியன் சோஷியல் ஃபாரம்!

தோஹா (03 ஜூலை 2020): புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, பனங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 46) என்பவர் கடந்த 5ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்து வந்துள்ளார் . கொரோனா நெருக்கடி காரணமாக வேலை இழந்து கடும் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த ஏப்ரல் 24 அன்று உயிரிழந்தார். கொரோனா தொற்று காரணமாக அச்சாதரணமான சூழ்நிலை நிலவுவதால் அவரது உடலை தாயகம் கொண்டு செல்ல முடியாமல் கடந்த இரு மாதங்களாக செய்வதறியாமல் திகைத்த நிலையில் சென்ற…

மேலும்...

கத்தாரிலிருந்து இந்தியா: எட்டு விமானங்கள் புறப்பாடு!

கத்தார் (13 மே 2020): சர்வதேச அளவில் வசிக்கும் இந்தியர்கள், நாடு திரும்ப இந்தியா உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப இயலாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துக் கொள்வதற்கான திட்டத்தை, வந்தே பாரத் மிஷன் (#VandeBharatMission) என்ற பெயரில் மத்திய அரசு வகுத்துள்ளது. கத்தாரிலிருந்து இந்தியா செல்ல விரும்புவோர், இந்தியத் தூதரகத்திற்கான இணைய தளத்தில் பதிவு செய்ய, தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. இதில் இதுவரை 44 ஆயிரம் பேர் பதிவு…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – கத்தார் அரசு அதிரடி உத்தரவு!

தோஹா (01 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கத்தாரில் வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் இருப்பவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அவர்களின் ஊதியம் தடையில்லாமல் வழங்கப்படும் என்று கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கத்தார் தொழில்துறை உயர் அதிகாரி முஹம்மது ஹசன் அல் உபைத் அலி தெரிவிக்கையில், “கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் தங்கியிருப்பவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அவர்களின் ஊதியம் மாதத்தின் முதல் வாரத்திலேயே…

மேலும்...