கத்தாரிலிருந்து இந்தியா: எட்டு விமானங்கள் புறப்பாடு!

Share this News:

கத்தார் (13 மே 2020): சர்வதேச அளவில் வசிக்கும் இந்தியர்கள், நாடு திரும்ப இந்தியா உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப இயலாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துக் கொள்வதற்கான திட்டத்தை, வந்தே பாரத் மிஷன் (#VandeBharatMission) என்ற பெயரில் மத்திய அரசு வகுத்துள்ளது.

கத்தாரிலிருந்து இந்தியா செல்ல விரும்புவோர், இந்தியத் தூதரகத்திற்கான இணைய தளத்தில் பதிவு செய்ய, தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. இதில் இதுவரை 44 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

வந்தே பாரத் திட்டத்தின் ஒரு அங்கமாக, கத்தார் நாட்டிலிருந்து எட்டு விமானங்கள் வரிசை வகுத்து கிளம்புகின்றன.

முதல் பகுதியாக இரு விமானங்கள் கத்தாரிலிருந்து புறப்பட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திற்கு ஏற்கனவே வந்தடைந்து விட்டன. கடந்த மே 9 ஆம் தேதியன்று கொச்சிக்கு 178 பயணிகளும்,  இரண்டாவது விமானத்தில் 181 பயணிகள் புறப்பட்டு மே 13 ஆம் தேதி விடிகாலை திருவனந்தபுரமும் வந்து சேர்ந்தனர்.

பதிவு செய்ததில் பெரும்பாலோனோ கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் விமானங்கள் கேரளாவிற்கு இயக்கப் பட்டுள்ளன.

தோஹாவிலிருந்து அடுத்தடுத்து புறப்பட உள்ள ஆறு விமானங்களின் விபரம்:

ஹைதராபாத் (20 May), விசாகப்பட்டினம் (20 May), கண்ணூர் (20 May), கொச்சி (21 May), பெங்களூரு (22 May) மற்றும் கயா (24 May)

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அடுத்தடுத்து விமானங்கள் புறப்பட உள்ளன.

 


Share this News: