கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை – திங்கள் முதல் தொடக்கம்!

வாஷிங்டன் (16 மார்ச் 2020): கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை அமெரிக்காவில் திங்கள் முதல் தொடங்கியது. உலகை ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்காவும், சீனாவும் தடுப்பு ஊசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் ஆரம்ப நிலை தடுப்பு ஊசி மருந்து கண்டறியப்பட்டு முதல் தடுப்பு ஊசி மருந்து சோதனை திங்கள்கிழமை அமெரிக்காவில் பரிசோதிக்கப்படும் என்ற தகவலை அசோசியேட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள்…

மேலும்...

இந்தியாவில் 15 நாட்களில் 110 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (16 மார்ச் 2020): கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் அதிக அளவில் மிரட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 110 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 93 நோயாளிகள் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர். இதில் 13 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். இரண்டு பேர்…

மேலும்...

வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க – முதல்வர் எச்சரிக்கை!

சென்னை (16 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுவதையும் அடுத்த 15 நாள்களுக்கு பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்த நபா்கள் கூட்டம் நிறைந்த…

மேலும்...

கொரோனா வைரஸ் – ஸ்பெயினில் ஒரே நாளில் 100 பேர் மரணம்!

ஸ்பெயின் (15 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 100 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை முன்னிட்டு, நோயின் மையமாக ஐரோப்பா மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்தது. ஐரோப்பாவில், இத்தாலிக்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டில் வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 7,753 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 288 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஸ்பெயியினில் கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்….

மேலும்...

கொரோனா வைரஸுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவோம்: பிரதமர் மோடி!

புதுடெல்லி (15 மார்ச் 2020): கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவோம் என காணொலி வாயிலாக நடைபெற்ற சார்க் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பூடான் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தெற்காசியாவில் கோவைட்-19 எதிர்கொள்வது குறித்து சார்க் நாடுகளுடன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற…

மேலும்...

கொரோனா சந்தேகம் – அருகில் இருந்தும் இறந்த தந்தையின் உடலைபார்க்க முடியாமல் போன மகன்!

திருவனந்தபுரம் (15 மார்ச் 2020): கேரளாவில் இளைஞர் ஒருவர் அவருக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இறந்த அவரது தந்தையின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை. கட்டிலில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை பார்ப்பதற்காக, கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த லினோ அபெல் என்ற இளைஞர், கடந்த 8 ஆம் தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் லினோ அபெல்,…

மேலும்...

கொரோனாவால் பரிதவித்த 289 பயணிகள் – கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

கொச்சி (15 மார்ச் 2020): இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கொச்சி விமான நிலையத்தில் அனைத்து பயணிகளும் எமிரேட்ஸ் விமானத்திலிருந்து வெளியெற்றப்பட்டனர். கொரோனா பீதி உலகையே அதிர வைத்துள்ளது. இந்தியாவில் முதலாவதாக கொரோனா பாதித்த மாநிலம் கேரளா. இந்நிலையில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 289 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்த 19 பேர் கொண்ட…

மேலும்...

அமெரிக்க அதிபருக்கு கொரோனா சோதனை!

வாஷிங்டன் (15 மார்ச் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகம் முழுவதும், 116 நாடுகளில், பரவி பலரை பலி வாங்கியுள்ளது . அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகி உள்ளனர். 20 மாகாணங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அமெரிக்காவில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனப்படுத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்திட நிதியும் ஒத்துக்கினார். இது குறித்து டிரம்ப் அளித்த…

மேலும்...

அச்சுறுத்தும் கொரோனா – பிரதமர் மனைவிக்கு கொரோனா பாதிப்பு!

ஸ்பெயின் (15 மார்ச் 2020): ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸின் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பெற்று வரும் கோம்ஸ் உடல் நலன் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை ஸ்பெயின் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்பெயின் அமைச்சருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடல் – முதல்வர் எடப்பாடி உத்தரவு!

சென்னை (15 மார்ச் 2020): கொரோனா பரவல் எதிரொலியாக, பாதுகாப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளிகள் மற்றும் (எல்.கே.ஜி, யு.கே.ஜி) தொடக்கப்பள்ளிகளுக்கு (1 ஆம் வகுப்பு முதல் முதல் 5 ஆம்…

மேலும்...