துபாயில் கொரோனாவுக்கு தாயை பறிகொடுத்து தனியே தமிழ்நாடு வந்த கைக்குழந்தை!

திருச்சி (18 ஜுன் 2021): துபாயில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தாய் உயிரிழந்த நிலையில், அவருடன் வசித்த குழந்தை நேற்று திருச்சி வந்தடைந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரி தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலன் (38) – பாரதி (38) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இதில், முதல் குழந்தை நுரையீரல் கோளாறு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டது. குடும்ப வறுமை காரணமாக தவித்துவந்த நிலையில், கடந்த மார்ச்…

மேலும்...

கொரோனவை பரப்பும் நோக்கத்தில் சுற்றித் திரிந்த இளைஞர்கள் கைது!

அபுதாபி (14 பிப் 2021): அபுதாபியில் கோவிட் பாசிட்டிவ் ரிபோர்ட்டுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கொரோனாவுடன் வெளியில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ கிளிப்பில், தனது மொபைல் தொலைபேசியில் பெறப்பட்ட கோவிட் நேர்மறை சோதனை முடிவை எடுத்துக்காட்டுகிறார். அதேபோல இன்னொருவர் பொது இடத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். வீடியோ கிளிப்பைப் பார்த்த அதிகாரிகள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர்….

மேலும்...

துபாயில் சிக்கித் தவிக்கும் சவூதி வாழ் இந்தியர்களுக்கு உதவ கோரிக்கை!

துபாய் (08 பிப் 2021): சவூதி செல்வதற்காக துபாயில் தனிமைப்படுத்தலில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவ மத்திய அரசு மூலமாக கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது கோவிட் தொற்றுநோயால் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு நேரடி விமானம் இல்லாததால் துபாய் வழியாக பலர் சவுதிக்கு சென்றனர். ஆனால் சவூதி அரேபிய மீண்டும் 20 நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் சவூதி அரேபியா விதித்த விமானத் தடை காரணமாக 14 நாட்கள் துபாயில் தனிமைப்படுத்தலுக்காகக் கழித்த…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெட் அலர்ட்!

துபாய் (17 ஜன 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் உட்பட பல பகுதிகளில் கடும் மூடுபனி மற்றும் மங்கலான கால சூழ்நிலையால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்களுக்கும், கோவிட் 19 தடுப்பூசி போடுவதில் முக்கியத்துவம்!

துபாய் (12 ஜன 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோவிட் தடுப்பூசி வழங்குவதில் இந்தியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அழைப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய சங்கங்களும் கோவிட் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியர்களுக்கு உதவி வருகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டினர் உட்பட அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் கோவிட் தடுப்பூசி பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் தடுப்பூசி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.

மேலும்...

சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் போக்குவரத்து எல்லையை திறக்கிறது!

துபாய் (09 ஜன 2021): சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் நாட்டின் கடல், நிலம் மற்றும் விமான போக்குவரத்து எல்லையை சனிக்கிழமை திறக்கிறது. சவூதி அரேபியாவின் அல் உலாவில் நடந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) கூட்டத்தில் கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது. இந்நிலையில் கத்தார் உடனான வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகளை ஐக்கிய அரபு அமீரகமும் நாளை மீண்டும் தொடங்குகிறது. இந்த முடிவை…

மேலும்...

துபாயிலிருந்து புறப்படும் விமான சேவைகள் இடமாற்றம்!

துபாய் (25 டிச 2020): கோவிட் காட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக துபாயிலிருந்து புறப்படும் விமானங்கள் ராஸல் கைமாவுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் சில ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்பட்டன. துபாயிலிருந்து கொச்சி, கோழிக்கோடு மற்றும் மங்களூர் ஆகிய விமானங்களுக்கு இன்று ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிளுக்கான விமானங்களும் இன்று ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்படும். இதன் ஒருபகுதியாக அபுதாபி, துபாய் மற்றும்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு துபாயில் கைதிகள் விடுதலை!

துபாய் (27 நவ 2020): ஐக்கிய அரபு எமிரேட் டிசம்பர் 2 தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 472 கைதிகளை விடுவிப்பதாக துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார். விடுவிக்கப்பட்டவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் இருப்பார்கள். ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் சயீத் அல் காசிமி, சிறைகளில் இருந்து 219 கைதிகளை விடுவிப்பதாக அறிவித்துள்ளார். வழக்கமான வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கு முழு ஆதரவையும் தருவதாக…

மேலும்...

தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் துபாய்!

துபாய் (01 நவ 2020): இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்திற்கு துபாய் நகரம் தயாராகி வருகிறது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை துபாய் நகரெங்கும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளியை ஒட்டி துபாயில் உள்ள வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை நிறுவனங்கள், நகரின் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

மேலும்...

கின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்!

துபாய் (30 அக் 2020):துபாயில் உள்ள ஒரு மரக் கப்பல் உலகின் மிக நீளமான மர கப்பலுக்கான கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பாரம்பரிய கப்பல் கட்டட தயாரிப்பு நிறுவனமான ஒபைட் பின் ஜுமா பின் ஜூலம் நிறுவனம் படைத்துள்ளது. உபைட் என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல் 300 அடி நீளமும் 66 அடி அகலமும் கொண்டது. துபாய் டிபி வேர்ல்ட் அருகே நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை…

மேலும்...