துபாய் (01 நவ 2020): இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்திற்கு துபாய் நகரம் தயாராகி வருகிறது.
இந்துக்களின் பண்டிகையான தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை துபாய் நகரெங்கும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
தீபாவளியை ஒட்டி துபாயில் உள்ள வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை நிறுவனங்கள், நகரின் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.