திமுக கூட்டணியில் புதிதாக இணையவுள்ள அந்த இரண்டு கட்சிகள்!

சென்னை (03 டிச 2022): திமுகவை எதிர்த்து பாஜக எகிறி அடித்துக் கொண்டு உள்ள நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து போராட திமுக தயாராகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 40 தொகுதிகளையும் கைபற்ற வேண்டும் என்று திமுக முனைப்போடு செயலாற்ற தொடங்கிவிட்டது. ஏற்கனவே கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த இலக்கை நோக்கி திமுக நகர தொடங்கியுள்ளது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இப்போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன்…

மேலும்...

அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம்!

சிவகங்கை (22 பிப் 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 21 மாநகராட்சிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 103 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் முன்னிலை…

மேலும்...

சதிகாரர்களுக்கு இடமில்லை – கமல்!

சென்னை (27 ஜூன் 2021): மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த, புதிய நிர்வாகிகளை அதன் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார். ஏற்கனவே “மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த, தேவையான மாற்றங்களைச் செய்வேன்!” என கடந்த மே 24ஆம் தேதி வீடியோ வாயிலாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று (26.06.2021) இணையவழி கலந்துரையாடலில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், ”நம்மைப் படகாக்கி தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ள விரும்பும் சதிகாரர்களுக்கு…

மேலும்...

தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சி மாறிய வேட்பாளர் – காமெடி பீசான கமல்!

திருச்சி (23 மார்ச் 2021): திருச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் மக்கள் நீதி மய்ய கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் திமுகவுக்கு மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ம.நீ.ம மற்றும் அதன் கூட்டணியில் உள்ள சமக, ஐ.ஜே.கே கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கமல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்ய கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…

மேலும்...

அந்த ஜாதியால்தான் அங்கு போட்டியிடவில்லை – கமல் பகீர் தகவல்!

சென்னை (14 மார்ச் 2021): மயிலாப்பூரில் போட்டியிடாததற்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் 130 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மயிலாப்பூர், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து கமல்ஹாசன் தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டால் ஜாதியோடு என்னை இணைத்து சொல்லிவிடுவார்கள், அது எனக்கு பிடிக்காத விஷயம்…

மேலும்...

மக்கள் நீதி மய்யத்துடன் இணையும் காங்கிரஸ்?

சென்னை (04 பிப் 2021): திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரசுக்கு 20 இடங்கள் வழங்கப்படலாம் என்ற நிலையில் காங்கிரஸ் அதற்கு சம்மதிக்கவில்லை. விசிக 6 இடங்களை பெற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்…

மேலும்...

ஓய்வெடுக்கப் போகிறேன் – நடிகர் கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு!

சென்னை (18 ஜன 2021): பிக் பாஸ் 4 நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் சில காலம் ஒய்வு மேற்கொள்ளப்போவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மநீம சார்பில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளேன். 5 பாகங்களாக 5 ஆயிரம் கி.மீ பயணித்து தமிழ் மக்களை சந்தித்துள்ளேன். மாற்றத்திற்கான மக்கள் எழுச்சியை கண்ணாரக் கண்டு திரும்பியிருக்கிறேன். அது போலவே, கொரோனா பொது முடக்கத்தின்போது தொடங்கிய…

மேலும்...

தமிழக சட்ட மன்ற தேர்தலில் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் அசாதுத்தீன் உவைசி!

ஐதராபாத் (15 டிச 2020): தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க அசாதுத்தீன் உவைசி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க்க ஒரு சக்தியாக உருவெடுத்த பிறகு, அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. 2021 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் 25 இடங்களுக்கும் குறையாமல் AIMIM போட்டியிட வாய்ப்புள்ளது…

மேலும்...

லைட் அடிச்சு பார்க்க ஆசை – கமல் விருப்பம்!

சென்னை (27 நவ 2020): தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட டார்ச்லைட் சின்னத்தையே ஒதுக்க வேண்டும்,’ என தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். அதன் பிறகு நடந்த தேர்தல்களில் போட்டியிட, அக்கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, இக்கட்சி தயாராகி வருகிறது….

மேலும்...

இப்போ ஏன் அங்கே போறாரு – கமல் மீது அதிருப்தியில் மநீம!

சென்னை (30 ஆக 2020): கமல் ஹாசன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக செல்வது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. திமுகவுக்கு ஐ-பேக்கும், அதிமுகவுக்கு சுனில் அன் கோவும் உள்ளது போல் கமல்ஹாசன் கட்சிக்கு சங்கையா சொல்யூசன்ஸ் என்ற தேர்தல் வியூக குழு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தாமல் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க செல்வதால் சங்கையா சொல்யூசன்ஸ் மற்றும்…

மேலும்...