ஒன்றிய அரசின் இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி இன்று தொடக்கம்!

புதுடெல்லி (01 ஜன 2022): நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ள இலவச உணவு தானிய விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 81.35 கோடி பயனாளிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி செலவாகும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னதாக தெரிவித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை…

மேலும்...

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ரத்து செய்தது ஒன்றிய அரசு!

புதுடெல்லி (09 டிச 2022): நாட்டின் சிறுபான்மை ஆராய்ச்சி மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை ரத்து செய்யப் பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் டி.என்.பிரதாபன் எம்.பி.யின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இதனை ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். “சிறுபான்மை மாணவர்கள் பல்வேறு சலுகைகளை பெறுவதால் இது நிறுத்தப்படுவதாக” ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். 2022-23 கல்வியாண்டிலிருந்து சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை தொடராது என்று முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர்…

மேலும்...
Supreme court of India

நாட்டில் யாரும் உணவின்றி உறங்கக்கூடாது – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (07 டிச 2022): நாட்டில் யாரும் உணவின்றி வெறும் வயிற்றில் தூங்கக் கூடாது என்பதே நமது கலாச்சாரம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டின் கடைசி நபருக்கும் உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலை மற்றும் நிதிப் பாதுகாப்பை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா…

மேலும்...

ஆதார் அட்டை பெற்று பத்தாண்டுகள் முடிவடைந்தால் ஆதாரை புதுப்பிக்க வேண்டும் – மத்திய அரசு!

புதுடெல்லி (10 நவ 2022): ஆதார் வழங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்தால் ஆதாரை உரிய ஆவணங்களை ஆதாரை புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது. அடையாள மற்றும் முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்களில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஆதாரின் துல்லியத்தை உறுதி செய்வதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும். ஆதார் அட்டையைப் பெற்று 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். துணை ஆவணங்கள் அடையாளச்…

மேலும்...

பில்கிஸ் பானு பாலியல் வழக்கு குற்றவாளிகள் விடுதலையை ரத்து செய்யும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

புதுடெல்லி (22 அக் 2022): 2002 கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய பெண்கள் அமைப்பின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய மனுவுடன் இந்த மனுவையும் விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. முன்னதாக, 11 குற்றவாளிகளுக்கு விடுதலை…

மேலும்...

சிறுபான்மையினர் நலத்துறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!

புதுடெல்லி (03 அக் 2022): சிறுபான்மையினர் நலத்துறையை மத்திய அரசு ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2006ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சிறுபான்மையினர் நலத்துறையை 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுபான்மை விவகாரங்கள் துறை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடி அரசில் ஒரே முஸ்லீம் முகமான…

மேலும்...

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பிற்கு ஐந்தாண்டு தடை!

புதுடெல்லி (28 செப் 2022): பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தேசிய அமைப்பிற்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இது சட்டவிரோத அமைப்பு என மத்திய அரசு அறிவித்துள்ளது. PFI மற்றும் தொடர்புடைய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. யுஏபிஏ பிரிவு 3ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. . கேம்பஸ் ஃப்ரண்ட், ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன்,…

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் மரணம் – மத்திய அரசு மற்றும் பிலகேட்ஸுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்!

மும்பை (03 செப் 2022): கொரோனா தடுப்பூசியால் பெண் மருத்துவர் உயிரிழந்ததாகவும் இழப்பீடு கோரி , உயிரிழந்த பெண்ணின் தந்தை அளித்த மனு குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசு, மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர், டிசிஜிஐ தலைவர் மற்றும் பலருக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பையை சேர்ந்த திலீப் லுனாவத் என்பவர் அளித்த தனது மனுவில், “கோவிட்-19…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தவில்லை – ஒன்றிய அரசு பதில்!

புதுடெல்லி (17 ஜன 2022): யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்லை என்று ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, ‘ மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடத்தில் காண்பிக்கும் கட்டாயத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தது. இந்த வழக்கில், ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு…

மேலும்...

வளைகுடா இந்தியர்களின் ஊதிய நிர்ணயத்தை திரும்பப்பெற்றது ஒன்றிய அரசு!

புதுடெல்லி (30 ஜுலை 2021): வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெறுகிறது வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசு குறைத்தது. இது முந்தைய குறைந்தபட்ச ஊதியத்தைவிட 30% முதல் 50% வரையாகும். கோவிட் காரணமாக. வளைகுடாவில் இந்தியர்கள் வேலை இழப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒன்றிய அரசின் முந்தைய இந்த உத்தரவு வெளிநாட்டில்…

மேலும்...