மதம் கடந்த நட்பு – முகமதுஅசன் ஆரிபின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராஜசேகர்!

வேதாரண்யம் (31 மே 2020): எல்லா மதமும் மனிதத்தைத்தான் போதிக்கின்றன என்பதற்கு மற்றுமொரு உதாரணம் அப்துல் ரஹீம், ராஜசேகர் நட்பு. வங்க தேசத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் இவர் ஓமனில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் ஒமனில் முத்துப்பேட்டை அருகே உள்ள வேதாரண்யத்தை சேர்ந்த ராஜசேகரும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்துல் ரஹீமின் சகோதரி மகன் 9 வயது முஹம்மது அசன் ஆரிஃப் என்ற சிறுவனின் இதயத்தில் ஓட்டை உள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள்…

மேலும்...

ரம்ஜான் பண்டிகைக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன்!

சென்னை (15 ஏப் 2020): ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ 5200 ஐ கொரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் ஏழம் வகுப்பு மாணவர் சல்மான் ஃபாரிஸ். மேற்கு மாம்பலம் கஸ்தூரிபாய் நகர், கல்யாண சுந்தரம் தெருவில் வசிப்பவர், ஏழாம் வகுப்பு மாணவர் சல்மான் ஃபாரிஸ். இவர் அவரது பெற்றோர் அவ்வப்போது வழங்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். எதிர் வரும் ரம்ஜான் பண்டிகைக்காக இந்த பணத்தை அவர் சேர்த்து வைத்ததாக…

மேலும்...

மனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி!

இஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அஃரிடியை பாராட்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில்” உண்மையில் மிக உண்ணதமான சேவையை செய்கிறீர்கள் அஃப்ரிடி. மனிதநேயமிக்க உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. உங்களுக்கு இறைவனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும். உலகில் அனைவருக்காகவும் நாம் பிரார்த்திப்போம்”…

மேலும்...

டெல்லி போர்க்களத்திலும் சில ரோஜாக்கள் – முஸ்லிம்களுக்கு கை கொடுக்கும் சீக்கியர்களும் தலித்துகளும்!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி வன்முறையில் பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிக்க குருத்வாராவை திறந்து வைத்துள்ளனர் சீக்கியர்கள். டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற…

மேலும்...