முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து!

ஐதராபாத் (26 மே 2020): முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீன் தனது ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நேற்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் பட்டது. கொரோனா பரவலை தடுக்க நான்காவது கட்ட லாக்டவுன் அமலில் இருப்பதால் ரம்ஜான் நோன்பு காலங்களிலேயே முஸ்லிம்கள் தொழுகையை வீட்டிலேயே தொழுது கொண்டனர். இந்நிலையில் நேற்றைய பெருநாள் கொண்டாட்டமும் வீடுகளிலேயே கொண்டாடப் பட்டது. மேலும் பெருநாள் தொழுகையையும் வீட்டிலேயே தொழுது கொண்டனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல…

மேலும்...

முன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்!

புதுடெல்லி (03 மே 2020): நலிந்த நிலையில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவிட தொடங்கப்பட்டுள்ள நலநிதிக்கு முன்னாள் கேப்டன் அசாருதீன் உள்ளிட்டோர் நிதி அளிக்க முன்வந்துள்ளனர். ‘கொரோனா பாதிப்பு காரணமாக பலர் தங்கள் வாழ்வாதரங்களை இழந்துள்ளனர். அந்தப் பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர். இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ஐசிஏ) சார்பில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் வீரர்களுக்கு நிதி உதவி செய்ய முடிவு செய்யப்பட்டது. ஐசிஏ சார்பில் 10 லட்ச ரூபாய்…

மேலும்...

ரூபாய் 100 கோடி மான நஷ்ட வழக்கு – அசாருதீன் எச்சரிக்கை (VIDEO)

மும்பை (23 ஜன 2020): தன் மீது பதியப்பட்ட வழக்கிற்கான மான நஷ்ட ஈடாக, ரூ. 100 கோடி கேட்டு வழக்கு தொடர்வேன் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் முஹம்மது அசாருத்தீன் தெரிவித்துள்ளார். மகாரஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் அசாருதீன் மற்றும் இருவர் ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக, டிராவல் உரிமையாளர் ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை மறுத்துள்ள அசாருத்தீன் இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது:…

மேலும்...