மேலக்காவேரி மசூதி வக்பு நிர்வாகிகள் தேர்வு!

கும்பகோணம், மேலக்காவேரி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வக்ஃபு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க மேலக்காவேரி பள்ளிவாசலின் சமுதாயக்கூடத்தில் 11.10.2020 ஞாயிறன்று தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது, வாக்கு எண்ணிக்கை முடிவில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் அதிகமாக வாக்குகள் பெற்ற 5 வேட்பாளர்கள் அப்துல் ரஷீத், ஹாஜி முகமது ஜீலானி, ஜாபர் சாதிக் அலி, அபு பக்கர் மற்றும் ஜாபர் பாட்சா ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர்களின் பதவி காலம் 11.10.2020 முதல்…

மேலும்...

மேலக்காவேரியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா!

கும்பகோணம் (25 ஆக 2020): தஞ்சை மாவட்டம், கும்பகோணம், மேலக்காவேரி மிஸ்வா மற்றும் தஞ்சை சித்தர் அருட்குடில் இணைந்து 200 தென்னம்பிள்ளைகள் & பழமரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று 24-08-2020,திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் மேலக்காவேரி பள்ளிக்கேணி குளக்கரையில் மேலக்காவேரி மிஸ்வா மற்றும் தஞ்சை சித்தர் அருட்குடில் இணைந்து 200 தென்னம்பிள்ளைகள் & பழமரக்கன்றுகள் நடும் விழா மேலக்காவேரி பள்ளிக்கேணி குளக்கரையில் சமூக இடைவெளியை கடைபிடித்து நடந்தேறியது.. நிகழ்ச்சியை பிரபல தொழிலதிபர்…

மேலும்...

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் இலவச ஹோமியோபதி மருந்து மேலக்காவேரியில் விநியோகம்!

கும்பகோணம் (20 ஜூலை 2020):மேலக்காவேரி முகையத்தீன் ஆண்டவர் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் மேலக்காவேரி மிஸ்வா தன்னார்வலர்கள் இணைந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்து ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரைகளை 2,500 குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் நிகழ்வு திங்கள் கிழமை காலை 11.00 மணி அளவில் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைத் தடுக்கும் வகையில் இன்று மேலக்காவேரி ஜாமியா பள்ளிவாசல் சமுதாய கூடத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து மேலக்காவேரி ஜாமியா…

மேலும்...

மேலக்காவேரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தல் -வீடியோ!

கும்பகோணம் மற்றும் மேலக்காவேரியில் நீர்ப்பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை நீதிமன்ற உத்தரவின்படி அகற்ற கோரியும், தூர் வாரி சீரமைப்பு செய்திட வலியுறுத்தி, மிஸ்வாவின் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு மீண்டும் இது குறித்து தனித்தனியாக அவரவர் பெயரில் (கவன ஈர்ப்பு) மேலக்காவேரி மிஸ்வா அமைப்பினர் நேற்று 07.07.2020 செவ்வாய் காலை 11.00 மணியளவில், முகக்கவசம் மற்றும் சமூக தனிநபர் இடைவெளியை கடைபிடித்து பதிவு அஞ்சல் அனுப்பினர்.

மேலும்...

மேலக்காவேரியில் உள்ள குளங்கள் தூர்வாரல் – ஆட்சியர் ஆய்வு!

மேலக்காவேரி (18 ஜூன் 2020): கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதி குளங்கள் தூர் வாறுவதை தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. ம. கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார். மேலக்காவேரியில் உள்ள குளங்கள் நீர்நிலைகள் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி நீர் வருவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக மேலக்காவேரி பள்ளிவாசல் குளத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், திரு. ம. கோவிந்தராவ் மேற்பார்வையிட்டார். இ.ஆ.ப. அவர்கள் மற்றும் கோரிக்கை மனு அளித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்ட மிஸ்வா குழுமத்தினர் மற்றும்…

மேலும்...

தஞ்சை மாவட்டம் மேலக்காவேரியில் நடைபெற்ற சுற்றுச்சூழலை நேசிப்போம் பாதுகாப்போம்!

தஞ்சாவூர் (05 ஜூன் 2020): உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், மேலக்காவேரி பகுதியில் “சுற்றுச்சூழலை நேசிப்போம் பாதுகாப்போம் “என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முஹம்மது யூனுஸ் தலைமை தாங்கினார். கவிஞர் மு அய்யூப்கான் வரவேற்று பேசினார். “சுற்றுசூழல்களை நேசிப்போம் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல்காதர், மு.அப்துல்அஜீஸ் ,பயாஸ் அஹமது ,பொறியாளர்.மைதீன் பாட்ஷா உட்பட பலரும் பேசினார்கள். நிகழ்ச்சியை ஒட்டி மரக்கன்றுகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு உரையும், மரப்பிள்ளைகளும் நடப்பட்டன. மேலும்…

மேலும்...

சிலிண்டர் தொகையை காட்டிலும் கூடுதல் தொகை வசூல் – கும்பகோணம் கோட்டாட்சியரிடம் மனு!

கும்பகோணம் (04 ஜூன் 2020): தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகர மேலக்காவேரி பகுதி மக்கள் நலன்களுக்காக பல்வேறு துறை அலுவலர்களை சந்தித்து முறையிடப்பட்டது. நேற்று 3.6.2020 புதன் காலை 10:00 மணியளவில் தொடங்கி, கும்பகோணத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேலக்காவேரி பகுதியில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு உருளை (சிலிண்டர்) வழங்குபவர்கள் ரசீது தொகையை காட்டிலும் கூடுதலாக சிலிண்டருக்கு பணம் வசூலிக்கும் செயலை தடுக்க கோரி மனு அளிக்கபட்டது, அதற்கடுத்ததாக மேலக்காவேரி பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார…

மேலும்...

மேலக்காவேரி வாய்க்கால் குளங்களுக்கு தூர்வார கோரிக்கை – வீடியோ!

கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதியில் பழமை வாய்ந்த குளங்கள் மற்றும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்...

கொரோனா பாதிப்பில்லாத பகுதியாக மாறிய மேலக்காவேரி கயித்துக்காரத்தெரு பகுதி!

கும்பகோணம் (17 மே 2020): கொரோனா பாதிப்பில்லாத பகுதியாக முழுமையாக மாறியது மேலக்காவேரி கயித்துக்காரத்தெரு பகுதி. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கயித்துக்காரத்தெருவை சேர்ந்த அனைவரும் வீடு திரும்பியதால் பொதுமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோயால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 28 நாட்கள் முடிவுற்று, புதிய தொற்றுகள் ஏற்படாமலிருந்தால் அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து விடுவிக்கவும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட…

மேலும்...

ஊரடங்கில் உறைந்து போயிருக்கும் ஏழைகளுக்கு உதவிய மேலக்காவேரி முஸ்லிம்கள்!

கும்பகோணம் (06 ஏப் 2020): ஊரடங்கு உத்தரவால் உறைந்து போயிருக்கும் ஏழை மக்களுக்கு மேலக்காவேரி முஸ்லிம் அமைப்பினர் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி புரிந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ளது. இதனால் வீடற்றோர், விதவைகள், தினசரி கூலியாட்கள், வயோதிகர்கள், சில பல ஏழைக் குடும்பத்தினர்கள் உணவுக்கு வழியின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பசியைப் போக்கும் விதமாக மேலக்காவேரி முஸ்லிம் பரிபாலன சபை (MMWA) உறுப்பினர்கள், கும்பகோணம், மேலக்காவேரி, சுவாமிமலை பகுதியில் உள்ளோருக்கு…

மேலும்...