ஆன்லைன் சூதாட்டம் நடத்தியதில் கைது!

ஆன்லைன் சூதாட்டம், மது – கத்தாரில் பலர் கைது! (வீடியோ)

தோஹா, கத்தார் (10 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா-வில், ஆன்லைன் சூதாட்டம், மது, மற்றும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்களை இரவோடு இரவாகக் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். தோஹாவில் சில இடங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), நேற்று நள்ளிரவில் திடீர் சோதனைகள் நடத்தியது. அதிரடி சோதனை இச் சோதனையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆண்களும்…

மேலும்...

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் மீது வழக்கு!

புதுடெல்லி (29 ஜூன் 2021): பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மத்திய பெட்ரோல் அமைச்சர் மீது சமூக ஆர்வலர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக கடும் உயர்வில் உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவே நாட்டில் பெட்ரோல் விலை உயர்வதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசின் வரிகளே பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த…

மேலும்...

ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் ஊடகங்களுக்கு எதிராக வழக்கு!

மும்பை (13 அக் 2020): பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான், அமீர்கான், அஜேய் தேவ்கன் உள்பட பல்வேறு நடிகர்களை உள்ளடக்கிய 34 பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நிறுவனங்கள் மற்றும் 4 பாலிவுட் அசோசியேசன்கள் இணைந்து ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த தற்கொலை சம்பவம்…

மேலும்...

பிரபல நடிகர் மீது 4 வழக்குகள் – பரபரப்பை கிளப்பிவிட்டு பிக்பாஸுக்குள் நுழைந்த நடிகை!

சென்னை (05 அக் 2020): நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான தர்ஷன் மீது 4 வழக்குகளை கொடுத்துவிட்டு பிக்பாஸுக்குள் நுழைந்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. தமிழ் பட நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டியும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் தர்ஷனும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுவிட்டதாக சனம் கூறியுள்ளார். ஆனால் தர்ஷன், சனம் ஷெட்டியை திருமணம் செய்வதாக கூறி மறுத்துவிட்டதாக கடந்த வருடம் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் நேற்று தொடங்கிய பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியும்…

மேலும்...

விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு!

சென்னை (20 செப் 2020): சென்னையில் விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள் விவசாய அணி சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தமிழக விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுகணக்கான பாஜகவினர் அங்கு திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சி நேரத்தில் வானில் பறக்கவிட கேஸ் பலூன் எனப்படும் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வைக்கப்பட்டிருந்தது….

மேலும்...
Advani

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – செப்டம்பர் 30 ல் தீர்ப்பு!

புதுடெல்லி (16 செப் 2020): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்கள் இடித்துத் தள்ளினர். இந்த மசூதி இடிப்புக்கு சதி செய்ததாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாக்‌ஷி மகராஜ் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவானது….

மேலும்...

ஆம்..!முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே! – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்!”

ஜெனீவா (10 செப் 2020): ரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் என்று அந்நாட்டு ராணுவ வீரர்கள் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர வைத்த சம்பவம் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைகள். பல லட்சம் ரோகிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக குற்றுயிரும் குலை உயிருமாக நாடுவிட்டு நாடு ஓடிப்போனார்கள்.அப்படிப் போனவர்களில் மியான்மர் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். இது தொடர்பாக திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்த இனப்படுகொலை தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. காம்பியா…

மேலும்...

இளம் பெண்ணை கர்ப்பமாக்கி சீரழித்த உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு!

மயிலாடுதுறை (30 ஆக 2020): இளம்பெண் ஒருவரை காதலித்து ஏமாற்றிய சப் இன்ஸ்பெக்டர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஓரடியம்பலத்தை சேர்ந்தவர் விவேக் ரவிராஜ். 29 வயதான இவர் சப் இன்ஸ்பெக்டராக 2017 ஆம் ஆண்டு மணல்மேடு காவல்நிலையத்தில் பணியாற்றிய போது, அப்பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ என்கிற தனியார் நிறுவனத்தில் பனியாற்றிவந்த இளம்பெண் ஒருவருடன் முகநூல் மூலம் நட்பை ஏற்படுத்திக்கொண்டு இருவரும் பழகினர். பிறகு…

மேலும்...

முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்திய ஜீ நியூஸ் செய்தியாளர் மீது வழக்கு பதிவு!

கோழிக்கோடு (10 மே 2020): முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விவாதம் நடத்திய ஜீ நியூஸ் செய்தியாளர் சுதீர் சவுத்ரி மீது ஜாமீன் பெற முடியாத வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில வழக்கறிஞர் கவாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் சுதிர் சவுத்ரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்ற மார்ச் 11 ந்தேதி ஜீ நியூஸ் சேனைல் அவசியமில்லாமல் ஜிஹாத் என்ற சொல்லை அவதூறாக பயன்படுத்தி குறிப்பிட்ட மதத்தினரின் மனதை புண்படுத்தும்…

மேலும்...

அந்த இருமல் சத்தத்தை கொஞ்சம் நிறுத்துங்கப்பா – நீதிமன்றத்தை தெறிக்கவிட்ட வழக்கு!

சென்னை (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் வந்தது ஒருபுறம் என்றால் அதுகுறித்த விழிப்புணர்வுகளும் தெறிக்க விடுகின்றன. கரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக் கொள்வது எவ்வாறு என்றொரு பிரச்சாரத்தை மொபைல் போன் மூலம் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தப் பிரசாரமே பெருந்தொல்லையாக மாறிக்கொண்டிருக்கிறது. மொபைல் போனில் ஒருவரை அழைத்ததும் ஒரு பெரிய இருமலுடன் தொடங்கி, பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணின் குரல் வெகுவேகமாக கரோனா பரவலில் தற்காத்துக் கொள்வது பற்றி ஒலிக்கிறது. பெரும்பாலான மொபைல் போன் எண்களைத்…

மேலும்...