கார் விபத்தில் பிரபல நடிகை படுகாயம்!

மும்பை (18 ஜன 2020): கார் விபத்தில் இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம் அடைந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலை கலபூர் டோல் பிளாசா அருகே சென்று கொண்டிருந்த நடிகை ஷபானா ஆஸ்மியின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த ஷபானா ஆஸ்மி,பன்வேலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது கணவர் ஜாவித் அக்தாரும் சென்றுள்ளார். எனினும் அவருக்கு காயம் எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (சனிக்கிழமை) மாலை 03;30…

மேலும்...

அபுதாபியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறு பேர் பலி!

அபுதாபி (16 ஜன2020): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுபேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வியாழன் காலை அல் ரஹானா கடற்கரை சாலையில் பெரிய ட்ரக்கும், லாரியும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து போக்குவரத்து காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப் பட்டவர்களை அவசர ஊர்திகள் மூலம் மருத்துவமனைகளூக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் ஐந்து பேர்…

மேலும்...

தஞ்சை அருகே கார் மோதி நான்கு பேர் பலி – பொங்கல் தினத்தில் சோகம்!

தஞ்சாவூர் (16 ஜன 2020): தஞ்சாவூர் அருகே கார் மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே வல்லம் புதூர் பகுதியில் ஜெபக்கூடம் உள்ளது. இதில், பொங்கல் திருநாளையொட்டி புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் வல்லம்புதூரிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, பின்னர் தஞ்சாவூர் – திருச்சி முதன்மை சாலையிலுள்ள அணுகு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில்…

மேலும்...

சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மரணம்!

புதுக்கோட்டை (12 ஜன 2020): புதுக்கோட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் (31) கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி…

மேலும்...

ஐயப்ப பக்தர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தமுமுகவினர்!

தென்காசி (07 ஜன 2020): ஐயப்ப பக்தர்களின் வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணித்த பக்தர்களுக்கு தமுமுகவினர் அடைக்கலம் கொடுத்து அலுவலகத்தில் தங்க வைத்தர்னர். தென்காசி மாவட்டம் பண்பொழியில் நேற்று இரவு (6-1-2020) விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அவர்கள் சபரிமலை செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் தங்குவதற்கு அருகில் இடமின்றி தவித்தனர். இந்நிலையில் ஜயப்ப பக்தர்கள் தங்குவதற்காக பண்பொழி தமுமுக அலுவலகத்தை கொடுத்து உதவி செய்துள்ளார்கள்.

மேலும்...