கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில் உள்ள லுலு எக்ஸ்பிரஸ்ஸின் பின்புறம் உள்ள பல மாடி கட்டிடம் அருகில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர். இந்த தகவலை கத்தார் சிவில் டிஃபென்ஸ்…

மேலும்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின் என்பவர் ஜோர்டானிலிருந்து ஜிசான் செல்லும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். சடலம் அல் லெய்த் அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் பற்றி அறிந்ததும் அவரது கணவர் ஜிசானிலிருந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று…

மேலும்...

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் நூலிழையில் உயிர் தப்பினார்!

சென்னை (06 மார்ச் 2023): ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபல இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன். தந்தையின் இசையிலும் யுவன் இசையிலும் தொடர்ந்து பாடல்களைப் பாடி வரும் அமீன், தனி இசைப்பாடகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் முன்னதாக தனது பாடல் ஒன்றுக்கான ஷூட்டிங் தளத்தில் படப்பிடிப்புக்காக…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய குழந்தை மரணம்!

ரியாத் (29 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுமாத இந்தியக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹசிம் மற்றும் அவரது மனைவி ஜார்யா, ஆறுமாத குழந்தை அர்வா, மகன்கள் அயன் மற்றும் அஃப்னான் மற்றும் ஹசிமின் மாமியார் நஜ்முன்னிசா ஆகியோர் சவூதியில் உம்ரா செய்துவிட்டு அல்கோபரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். ரியாத்தில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள அல்…

மேலும்...

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் காயம்!

புதுடெல்லி (30 டிச 2022): – இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கார் விபத்தில் காயமடைந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பிய ரிஷப், புதுதடெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ரூர்க்கியில் உள்ள ஹம்மத்பூர் ஜல் அருகே நர்சன் எல்லையில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. மெர்சிடிஸ் காரை ரிஷப் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. காரின் வெளிப்பகுதி கடுமையாக எரிந்துள்ளது. எனினும்…

மேலும்...

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் கார் விபத்தில் காயம்!

மைசூர் (27 டிச 2022): பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் கார் விபத்தில் சிக்கினர். அவர்கள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற வாகனம் மைசூரில் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கடகோலா நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. பங்கூரிலிருந்து பந்திப்பூர் நோக்கி பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து நடந்தபோது பிரஹலாத் மோடி, அவரது மகன் மற்றும் அவரது மனைவி மட்டுமே…

மேலும்...

மகாராஷ்டிராவில் ரெயில் நிலைய மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!

மும்பை (27 நவ 2022): மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் உள்ள பலார் ஷா ரயில் நிலையத்தில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது. நடைமேடை எண் 1 மற்றும் நடைமேடை எண் 4 ஆகியவற்றை இணைக்கும் பாலம் இன்று இடிந்து விழுந்தது. மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். பாலம் இடிந்து ரயில் பாதையில் இருபது அடி உயரத்தில் இருந்து மக்கள் விழுந்தனர். அப்போது அந்த பாதையில் ரயில்கள் எதுவும் ஓடாததால் பெரும்…

மேலும்...

சென்னை மைசூர் வந்தேபாரத் ரெயில் மீது கன்றுகுட்டி மோதி ரெயில் பழுது!

சென்னை (18 நவ 2022): மைசூரு- பெங்களூரு-சென்னை வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் பழுதடைந்தது. இந்த விபத்தில் கன்றுக்குட்டி உயிரிழந்தது. விபத்து ஏற்பட்ட போது ரயில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனால் இரண்டு நிமிடம் நிறுத்தப்பட்ட ரயில், மீண்டும் சென்னைக்கு பயணத்தை துவங்கியது. இதுகுறித்து தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஏ ஏழுமலை கூறுகையில் “கன்றுக்குட்டியின் உரிமையாளரைக் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்து…

மேலும்...

ஜித்தாவில் வாகனம் மோதியதில் 4 வயது இந்திய சிறுமி உயிரிழப்பு!

ஜித்தா (15 செப் 2022): சவுதி அரேபியா ஜித்தாவில் வாகனம் மோதிய விபத்தில் 4 வயது இந்திய சிறுமி உயிரிழந்தார். கேரள மாநிலம் பாலக்காடு தெக்குமுறியைச் சேர்ந்த புலிகள் முஹம்மது அனஸின் மகள் ஈஸா மர்யம். இவர் தாயுடன் சாலையை கடக்கும்போது வாகனம் மோதியதில் ஈஸா மர்யம் பரிதாபமாக உயிரிழந்தார். தாய்க்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் நல்லடக்கம் நேற்று மாலை ருவைஸ் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஈஸா மர்யமும், அவரது தாயும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு…

மேலும்...

தஞ்சை அருகே கோவில் திருவிழாவில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி!

தஞ்சை (27 ஏப் 2022): தஞ்சாவூர் அருகே கோவில் தேர் திருவிழாவில் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான 94 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. தேர் கோவில் அருகே வந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது….

மேலும்...