Qatar tops In Corona Cure 1

குறைந்த சம்பளம் பெறுபவர்களுக்கு தனிமைப் படுத்தலில் சலுகை!

தோஹா (17 ஜூலை 2021): கத்தர் நாட்டிற்கு இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடாமல் வரும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு, தனிமை படுத்தலில் 14 நாட்களிலிருந்து 10 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளது. இந்த நடைமுறை, குறைந்த சம்பளம் பெறுபவர்கள் மற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப் படுகிறது. டிஸ்கவர் கத்தர்  என்கிற இணைய தளத்தில் இதுகுறித்த கூடுதல் தகவல்களையும் முன்பதிவினையும் மேற் கொள்ளலாம். (www.discoverqatar.qa) கத்தருக்கு வருபவர்கள் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி பெற்றிருந்தால் தனிமைப் படுத்தல் அவசியமில்லை…

மேலும்...

கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் கத்தார் நாட்டிற்கு அங்கீகாரம்!

தோஹா (10 ஜூலை 2021): கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடுகளில் கத்தார் நாடு இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஜெர்மன் பத்திரிகையான ‘டெர் ஸ்பீகல்’ வெளியிட்டுள்ள பட்டியலில் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. லக்சம்பர்க், நோர்வே மற்றும் டென்மார்க் இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. ஆசிய நாடுகளான தைவான் ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் ஆறாவது இடத்திலும், ஜப்பான் ஏழாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் கத்தார் உலகளவில் 15 வது இடத்தில் உள்ளது….

மேலும்...

கத்தாரில் மேலும் தளர்த்தப்படும் சில கோவிட் கட்டுப்பாடுகள்!

தோஹா (08 ஜூலை 2021): கத்தாரில் கோவிட் கட்டுப்பாடு தளர்வுகளின் ஒரு பகுதியாக மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முடிதிருத்தும் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தனியார் கல்வி பயிற்சி மையங்கள் மற்றும் தோஹா மெட்ரோ ஆகியவற்றிற்கு 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வகையில் மேம்படுத்தப்படும். அதேபோல பொது இடங்களில் பதினைந்து பேர் வரை கூடலாம். தனியார் சுகாதார நிலையங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேலும்...

கத்தார் எல்லை பாலைவனத்தில் சிக்கித் தவித்த இந்திய பெண் மீட்பு!

தோஹா (08 ஜூலை 2021): சவூதி, கத்தார் எல்லை பாலைவனத்தில் சிக்கித் தவித்த இந்தியப் பெண் ஒருவர், சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். விசாகப்பட்டினத்தை சேர்ந்த எலிசம்மா என்ற பெண் கத்தார் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். கத்தாருக்கு வந்தபின் எலிசம்மா அவரது ஸ்பான்சரால் சவூதி, கத்தார் எல்லையில் உள்ள சல்வா பாலைவனத்தில் ஆடுகள் மேய்க்க பணிக்கப் பட்டுள்ளார். சரியான உணவின்றி, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கடந்த இரண்டரை வருடங்களாக இந்த கடும்…

மேலும்...

இந்தியர்கள் கத்தாருக்குச் செல்ல விசா வழங்கும் பணி துவக்கம்!

கத்தார் (ஜூலை 5): கொரோனா பரவல் காரணமாக, நெடுங்காலமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இந்தியர்களுக்கான விசாக்கள் வழங்கும் பணி, இன்று முதல் கத்தாரில் துவங்கியது. இதன்மூலம், கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினரை கத்தாருக்கு வரவழைக்கும் வண்ணம் ‘ரெஸிடென்ஸ் விசாக்கள்’ இன்றுமுதல் வழங்கப்படும். Metrash2 எனப்படும் கத்தர் அரசின் ஆப் வழியே மிக எளிதாக இந்த விசா பெற எவரும் விண்ணப்பிக்கலாம். இச்செய்தி, இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.    

மேலும்...

முதலிடம் பிடித்த கத்தார் நேஷனல் வங்கி!

தோஹா (03 ஜூலை 2021): மத்திய கிழக்கில் சிறப்பாக செயல்படும் நிதி நிறுவனங்களின் பட்டியலில் கத்தார் நேஷனல் வங்கி முதலிடத்தில் உள்ளது. கத்தார் நேஷனல் வங்கி உலகளவில் 79 வது இடத்தில் உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா உள்ளிட்ட மேனா பிராந்தியத்தின் முதல் 1000 வங்கிகளில் கத்தார் நேஷனல் வங்கி முதலிடத்தைப் பிடித்துள்ளதாக, முன்னணி வங்கி பத்திரிகைகளில் ஒன்றான தி பேங்கர் பத்திரிகையில் வெளியிதப்பட்ட பட்டியலில் உள்ளது. இந்த பட்டியல் தரவரிசை மொத்த சொத்துக்கள்,…

மேலும்...

கோடைக்கால விடுமுறை – கத்தார் கல்வி அமைச்சகம் எச்சரிக்கை!

தோஹா (05 மார்ச் 2021): கத்தார் நாட்டில் பள்ளி ஆசிரியர்கள் குறுகியகால கோடை விடுமுறையில் விமான பயணம் மேற் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்குப் பிறகு மார்ச் 13 முதல் மார்ச் 18 வரை விடுப்பு கிடைக்கும். கோவிட் கால சூழலாக இருப்பதால் குறுகிய விடுப்பில் விமான பயணம் மேற்கொண்டால் சரியான நேரத்தில் கத்தாதிரும்புவது கடினம் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 21 முதல் கோவிட் தடுப்பூசி போடாத ஊழியர்களை…

மேலும்...

கத்தாரில் விசிட் விசாவில் வருபவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

தோஹா (25 பிப் 2021): கத்தர் நாட்டில் விசிட் விசாவில் வருபவர்களுக்கும் மருத்துவ காப்பீடு அவசியமாக்கப்பட்டுள்ளது. கத்தார் சுகாதார சேவைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மசோதாவின் விதிகளின்படி, நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களுக்கும் விசிட்டில் வருபவர்களுக்கும் அடிப்படை சுகாதார சிகிச்சை உள்ளிட்ட சுகாதார சேவைகள் சிறப்பு மருத்துவ காப்பீடு இருந்தால் மட்டுமே கிடைக்கும். அமைச்சரவை ஒப்புதல் அளித்த வரைவு ஷூரா கவுன்சிலுக்கு அனுப்ப்பட்டு ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். இந்த வரைவின்படி திறமையான, தரமான மற்றும் நிலையான…

மேலும்...

சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் போக்குவரத்து எல்லையை திறக்கிறது!

துபாய் (09 ஜன 2021): சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் நாட்டின் கடல், நிலம் மற்றும் விமான போக்குவரத்து எல்லையை சனிக்கிழமை திறக்கிறது. சவூதி அரேபியாவின் அல் உலாவில் நடந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) கூட்டத்தில் கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது. இந்நிலையில் கத்தார் உடனான வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகளை ஐக்கிய அரபு அமீரகமும் நாளை மீண்டும் தொடங்குகிறது. இந்த முடிவை…

மேலும்...

சவூதி கத்தார் எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு – குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்!

ரியாத் (04 ஜன 2020): சவூதி மற்றும் கத்தார் இடையே தரை மற்றும் வான்வழி போக்குவரத்து மீண்டும் திறக்கப்படவுள்ளதாக குவைத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் நாசர் அல்-சபா திங்களன்று தெரிவித்தார். சவூதி மற்றும் கத்தார் எல்லைகளை திறக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக குவைத் அமைச்சர் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.  

மேலும்...