அமித் ஷாவை ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் சந்திக்க போலீஸ் மறுப்பு!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி ஷாஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் போராட்டக் காரர்கள், மத்திய அமைச்சர் அமித் ஷா வீட்டிற்கு பேரணியாக சென்று சந்திக்கவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் டெல்லி போலீஸ் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. தொலைக்காட்சி நேர்காணலில் டெல்லி தோல்வி குறித்து பேசியிருந்த அமித் ஷா, ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்கள்…

மேலும்...

தமிழகத்தில் சிஏஏ போராட்டத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!

சென்னை (16 பிப் 2020): தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்க ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் போராட்டம்…

மேலும்...

சென்னை ஷஹீன் பாக் அப்டேட்: சிஏஏ வை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் -வீடியோ!

சென்னை (16 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நீடிக்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பெண்கள் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பெண்கள் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் போராட்டம் தமிழகமெங்கும் பரவியது. மேலும் சென்னையில் தொடர் போராட்டத்தை பொதுமக்கள் அறிவித்துள்ளனர். முக்கிய கோரிக்கையாக, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், குடியுரிமை சட்டம் உள்ளிட்ட…

மேலும்...

சென்னை ஷஹீன் பாக் – தொடரும் மூன்றாவது நாள் போராட்டம்!

சென்னை (16 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நீடிக்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) பெண்கள் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசா நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பெண்கள் உள்ளிட்ட பலர் காயம் அடைந்தனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தடியடியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்க வலியுறுத்தியும் அந்தப் பகுதியில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் தடியடி குறித்த தகவல்…

மேலும்...

அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி – ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் முடிவு!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களை தாண்டி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி…

மேலும்...

சென்னையில் ஷஹீன் பாக் – மீடியா ஒன் தொலைக்காட்சியின் முழு கவரேஜ் – VIDEO

சென்னை (16 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை டெல்லி ஷஹீன் பாக்காக மாறியுள்ள நிலையில் சனிக்கிழமை போராட்டக் களத்தை நேர்மையாக செய்தி தந்துள்ளது மலையாள சேனலான மீடியா ஒன் தொலைக்காட்சி. குறிப்பாக பெரும்பாலான எதிர் கட்சிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. குறிப்பாக கட்சி, மத பேதமின்றி அதிமுக, பாஜக தவிர அனைத்து சமூகத்தினரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதை இப்போராட்டக் களம் காட்டுகின்றது. தமிழக சட்டமன்றத்தில் கேரளா, பஞ்சாபைப் போன்று குடியுரிமை…

மேலும்...

பிப்ரவரி 19 ல் சட்டமன்ற முற்றுகை – ஜவாஹிருல்லா அறிவிப்பு!

சென்னை (15 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாக பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய கண்மூடித் தனமான தாக்குதலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை இஸ்லாமிய கூட்டமைப்பினர் இன்று…

மேலும்...

சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்குதல் – வைகோ எச்சரிக்கை!

சென்னை (15 பிப் 2020): மதிமுகவின் உயர் மட்ட குழு கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைப்பெற்றது. அப்போது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாசிச கொள்கைகள் தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் தினந்தோறும் போராட்ட களத்தை சந்திக்க நேரிடும் என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் குடியிரிமை திருத்த சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெற…

மேலும்...

1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி?

1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி? கீழ்கண்டவாறு ஒவ்வொருவரும் செய்யுங்கள்: 1. வீட்டிலுள்ள அனைவரின் பிறந்த தேதி எழுதி கொள்ளுங்கள். 2. அதனை மூன்று கேட்டகரியாக பிரியுங்கள். அ. 1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் ஆ. 1987 ஜூலை 1 க்கும் 2004 டிசம்பர் 31 க்கும் இடையில் பிறந்தவர்கள் இ. 2004 டிசம்பர் 31 க்குப் பின்னர் பிறந்தவர்கள் 3. இதில், 1987 ஜூலை…

மேலும்...

தூத்துகுடி துப்பாக்கிச் சூடு – சென்னை வண்ணாரப் பேட்டை தாக்குதல் – கனிமொழி ஆவேசம்!

சென்னை (15 பிப் 2020): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணையில் உள்ள போலீஸ் அதிகாரிதான் சென்னை வண்ணாரப் பேட்டை தாக்குதலின் பின்னணியில் உள்ள கபில்குமார் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று சி.ஏ.ஏ. / என்.ஆர்.சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை உரிய முறையில், சரியாக கையாண்டிருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம். சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ், நிலைமையை…

மேலும்...