ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார மைய்யம் குழப்பம்!

மாஸ்கோ (14 ஆக 2020): சில தினங்களுக்கு முன்னால் ரஷ்ய அதிபர் புதின் கொரோனா வைரசுக்கு எதிரான புதிய தடுப்பூசியை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என்றும், அதைத் தன்னுடைய மகளுக்குச் செலுத்தி சோதனை செய்ததாகவும் அறிவித்தார். ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த ஆலோசகரான புருஸ் அய்ல்வர்ட் இது குறித்துக் கூறும் போது, “ரஷ்யாவின் தடுப்பூசி குறித்தான உறுதித்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தற்போது எந்தத் தகவலும் கூற முடியாது. அது குறித்தான எந்த விவரமும் எங்களிடம் இல்லை….

மேலும்...

கொரோனா குறித்த 70 லட்சம் போலி பதிவுகள் நீக்கம் – ஃபேஸ்புக் அதிரடி நடவடிக்கை!

நியூயார்க் (14 ஆக 2020): கொரோனா குறித்த 70 லட்சம் போலி பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது, ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பதிவுகளை மிகவும் கண்காணித்து வருகிறது. அதனடிப்படையில், போலி பதிவுகள், வெறுப்பூட்டும் பதிவுகள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பட்சத்தில் அவை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவிட் 19 குறித்த தவறான பதிவுகள் மற்றும் போலியான மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்டவைகள் என 70…

மேலும்...

கொரோனாவின் கோர முகம் – மகனும் தாயும் மரணம்!

கடலூர் (12 ஆக 2020): கொரோனா பாதிப்பால் மகன் இறந்த அதிர்ச்சி காரணமாக தாயும் இறந்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டானா கார தெருவில் வசித்து வரும் கலியமூர்த்தி – மீனாட்சி தம்பதிகள். இவர்களின் மகன் சூரியகுமார். வயது 50. இவருக்கு கலா (வயது 45) என்ற மனைவியும், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இவர் காட்டுமன்னார்கோவில் செட்டியார் ரோட்டில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப்…

மேலும்...

முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

மாஸ்கோ (11 ஆக 2020): முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பொதுமக்களுக்கு இடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். பல்வேறு கட்ட சோதனைகள் முடிந்துள்ள நிலையில் இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும் அறிவித்துள்ள புதின், இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக புதின் கூறுகிறார். தனது மகளுக்கு முன்பே இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும்…

மேலும்...

முன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (10 ஆக 2020): முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவரது ட்விட்டரில் கூறியிருப்பதாவது; “உடல் பொதுவான சோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த நிலையில் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு…

மேலும்...

அமித்ஷாவின் கொரோனா ரிசல்ட்? – வெளியான பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (09 ஆக 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா நெகட்டிவ் என செய்தி வெளியான நிலையில், இரண்டொரு நாளில் கொரோனா மறு பரிசோதனை செய்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.. பாஜக எம்பி மனோஜ் திவாரி, வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார் என்றும், பரிசோதனையில் நெகடீவ் என வந்ததாக கூறியிருந்தார். இது பாஜகவினரையும், அவரது குடும்பத்தினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே அடுத்த இரண்ரொரு நட்களில் அமித்ஷாவுக்கு கொரோனா…

மேலும்...

சென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்!

சென்னை (09 ஆக 2020): சென்னை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக .பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஜூலை 5ம் தேதி நிலவரப்படி, சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இருக்கும் தெருக்களின் எண்ணிக்கை 8,402 ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி, இது 513…

மேலும்...

திருமாவளனின் மூத்த சகோதரி கொரோனா பாதிப்பால் மரணம்!

சென்னை (05 ஆக 2020): கொரோனா நோய்த் தொற்று காரணமாகப் பாதிப்பிற்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவனின் மூத்த சகோதரி பானுமதி உயிரிழந்தார். பானுமதிக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பானுமதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பானுமதி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்த செய்தி விடுதலை சிறுத்தைகள்…

மேலும்...

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (05 ஆக 2020): பிரபல் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா, இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்க வில்லை. இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது தான் நல்ல உடல்…

மேலும்...

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை (02 ஆக 2020): தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், ராஜ் பவனில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஒரு தடுப்பு நடவடிக்கையாக, ஆளுநர் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பின், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய நிலையில்…

மேலும்...