ஊழியர்களுக்கு ஐந்து வருடங்கள் விடுமுறை அளித்து அதிர வைத்த நிறுவனம்!

புதுடெல்லி (15 ஜூலை 2020): ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஏராளமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அதிலும், ஏற்கெனவே கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது கொரோனாவால் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் நெருக்கடியை சமாளிப்பதற்காக ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக திறன்,…

மேலும்...

கொரோனாவும் அரசு வேலையும் – மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு!

கொல்கத்தா (15 ஜூலை 2020): கொரோனா பாதிப்புக்கு எதிரான பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். . இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்கத்திலும் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி, மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா வாரியர் கிளப் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த கிளப்பில்,…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 29,429 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (15 ஜூலை 2020): இந்தியாவில் ஒரே நாளில் 29,429 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவில் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 582 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும்...

கொரோனாவிலும் மருந்தில் தலைவிரித்தாடிய கொள்ளை!

ஐதராபாத் (14 ஜூலை 2020): அனுமதியின்றி கொரோனா மருந்துகள் மற்றும் கொரோனா சோதனை கிட்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்த 8 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா காலத்தில் மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்தும் வகையிலான சிறப்பு மருந்து,மாத்திரைகள், டெஸ்ட் கிட்டுகள் ஆகியவற்றை சட்டத்துக்குப் புறம்பான வகையில் கொள்ளை விலைக்கு விற்பனை செய்வதாக ஐதராபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் ஊசி போடுவதற்கு பயன்படும் மருந்துகளை 35 ஆயிரம்…

மேலும்...

சவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்!

ரியாத் (14 ஜூலை 2020): சவூதில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். உலகை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் சவூதிஅரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் சமீப காலமாக சவூதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும் மீள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளன. அந்த வகையில் இதுவரையிலான அதிகபட்சமாக இன்று (14 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை) 7,718 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும் 2692…

மேலும்...

கொரோனா கொடூரம் – தாயை வீதியில் தவிக்க விட்ட மகன்கள்!

திருச்சி (14 ஜூலை 2020): கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தால் பெற்ற தாயை வீதியில் வீதியில் தவிக்க விட்டுள்ளனர் இரண்டு மகன்கள். திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார்.பி.டி நகரைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் குமார் தன்னுடன் இருந்த தாயை வீட்டின் வெளியே தனியே விட்டுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. வீட்டின் வெளியே…

மேலும்...

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காவல் உதவி ஆய்வாளர் மரணம்!

சென்னை (14 ஜூலை 2020): சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த காவல்துறையினர் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த குருமூர்த்தி என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஏற்கனவே அத்துறையை சேர்ந்த மூன்று பேர்,…

மேலும்...

பாரசிடமால் மாத்திரை வாங்க மருத்துவர் சீட்டு அவசியமில்லை – தமிழக அரசு தகவல்!

சென்னை (14 ஜூலை 2020): பாரசிடமால் மாத்திரை வாங்க மருந்து சீட்டு அவசியமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்க வேண்டுமானால் மருத்துவர்களிடம் இருந்து மருந்து சீட்டு வாங்கி இருக்க வேண்டும் என்றும் மருந்து சீட்டு இல்லாதவர்களுக்கு பாரசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படாது எனவும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. கொரோனா வைரசுக்கு காய்ச்சல், இருமல், ஜலதோஷம் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. இதனால் சாதாரண காய்ச்சலும்…

மேலும்...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை (14 ஜூலை 2020): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13.07.2020 இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்...

அமிதாப் பச்சன் குடும்பத்துக்கு கொரோனவை பரப்பியது இவர்தானாம்!

மும்பை (13 ஜூலை 2020): நடிகர் அமித்தாப் பச்சன் குடும்பத்துக்கு யார் மூலம் கொரோனா பரவியது என்ற கேள்வியே தற்போது மேலோங்கி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சன், மற்றும் மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இந்நிலையில் இந்நிலையில் வீட்டுக்குள் அடங்கி கிடந்த அமிதாபுக்கு யார்மூலம் கொரோனா பரவியிருக்கக் கூடும் என்றதில், நடிகர் அபிஷேக் பச்சன் மூலமாகதான் அமிதாப்…

மேலும்...