முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

மாஸ்கோ (11 ஆக 2020): முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பொதுமக்களுக்கு இடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். பல்வேறு கட்ட சோதனைகள் முடிந்துள்ள நிலையில் இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும் அறிவித்துள்ள புதின், இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக புதின் கூறுகிறார். தனது மகளுக்கு முன்பே இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும்…

மேலும்...

அமித்ஷாவின் கொரோனா ரிசல்ட்? – வெளியான பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (09 ஆக 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா நெகட்டிவ் என செய்தி வெளியான நிலையில், இரண்டொரு நாளில் கொரோனா மறு பரிசோதனை செய்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.. பாஜக எம்பி மனோஜ் திவாரி, வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார் என்றும், பரிசோதனையில் நெகடீவ் என வந்ததாக கூறியிருந்தார். இது பாஜகவினரையும், அவரது குடும்பத்தினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே அடுத்த இரண்ரொரு நட்களில் அமித்ஷாவுக்கு கொரோனா…

மேலும்...

சென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்!

சென்னை (09 ஆக 2020): சென்னை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக .பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஜூலை 5ம் தேதி நிலவரப்படி, சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இருக்கும் தெருக்களின் எண்ணிக்கை 8,402 ஆக இருந்த நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி, இது 513…

மேலும்...

திருமாவளனின் மூத்த சகோதரி கொரோனா பாதிப்பால் மரணம்!

சென்னை (05 ஆக 2020): கொரோனா நோய்த் தொற்று காரணமாகப் பாதிப்பிற்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவனின் மூத்த சகோதரி பானுமதி உயிரிழந்தார். பானுமதிக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பானுமதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பானுமதி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்த செய்தி விடுதலை சிறுத்தைகள்…

மேலும்...

இந்தியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா!

புதுடெல்லி (02 ஆக 2020): இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு 20க்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் அதன் தாக்கம் உச்சகட்டத்தில் இருந்து வருகின்றது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,95,988லிருந்து 17,50,723ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,95,647லிருந்து 11,46,879ஆக உள்ளது. கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511லிருந்து 37,403 ஆக அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளான…

மேலும்...

மிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடனும் தொடங்கியது ஹஜ் 2020!

மக்கா (30 ஜூலை 2020): கொரோனா பரவலால் இவ்வருடம் நடைபெறுமா? என்ற கேள்விக்குறியுடன் இருந்த ஹஜ் யாத்திரை மிகக்குறைந்த ஹஜ் யாத்ரீகர்களுடன் மிகுந்த கட்டுப்பாடுகளுடனும், சமூக இடைவெளியுடனும் தொடங்கியது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 4 மாதங்களாக இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவில் வழிபாடுகளுக்கு பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்வருட உம்ராவும் மார்ச் மாதம் இடையில் நிறுத்தப்பட்டது. எனவே இவ்வருடம் ஹஜ்ஜும் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. எனினும் இவ்வருடம் மிகக்குறைந்த யாத்ரீகர்களுடன்…

மேலும்...

கொரோனா பாசிட்டிவ்: வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள நிபந்தனையுடன் மாவட்ட ஆட்சியர் அனுமதி!

தஞ்சாவூர் (29 ஜுலை 2020): கொரோனா பாசிட்டிவ் என உறுதியானாலும், அவரவர் வீட்டிலேயே நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக வல்லம் மற்றும் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள குடிசை மாற்று…

மேலும்...

தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர் – காரணம் ஏன் தெரியுமா?

சென்னை (29 ஜூலை 2020): தமிழக ஆளுநர் பன்வாரிலால் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டார். உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவி வருகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனை அறிக்கை வாயிலாக ஆளுநர் மாளிகை…

மேலும்...

அரசு மருத்துவமனை குறித்து அதிர வைக்கும் தகவல் – மருத்துவரின் பரபரப்பு இறுதி நிமிடங்கள்!

இராஜபாளையம் (28 ஜூலை 2020): கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்த மருத்துவர் இறப்பதற்கு முன்பு வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் சாந்திலால், கடந்த 10-ம் தேதி, கொரோனா தொற்று காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

மேலும்...

புதுச்சேரி முதல்வர் நாராயண சாமிக்கு கொரோனா பாதிப்பா?

புதுச்சேரி (28 ஜூலை 2020): புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி மற்றும் அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங். – எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஜெயபால் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர்ந்து 4 நாட்கள் பங்கேற்றிருந்தார். இதையடுத்து புதுச்சேரி தலைமைச் செயலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடி வைக்கப்பட்டது. இதன்பிறகு புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடர் மரத்தடியில் நடைபெற்றது….

மேலும்...