முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசியவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்!

சென்னை (06 பிப் 2023): முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்காக விமர்சனங்களைச் சந்தித்த பாஜக முன்னாள் நிர்வாகி லட்சுமணச்சந்திரா விக்டோரியா கவுரி, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். ஆர்எஸ்எஸ் ஊதுகுழலான பாஜக மகிளா மோர்ச்சா தலைவராக இருந்த விக்டோரியா கவுரி. கிறிஸ்தவத்திற்கு எதிரான கட்டுரை எழுதியதற்காக விமர்சிக்கப்பட்டார். மேலும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசியதால் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் இவரை நீதிபதியாக பரிந்துரைத்துள்ள நிலையில் கொலிஜியம் பரிந்துரைக்கு…

மேலும்...

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 2 ஆயிரம் கோடி முறைகேடு – உரிய விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (17 ஆக 2021): தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முறைகேடாக தனிநபர்களுக்கு விற்பனை செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய விசாரணை நடத்தக் கோரிய மனு மீது விசாரணை நடத்தி ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

மேலும்...

பார்வையற்ற பெண்ணிற்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் சூப்பர் தீர்ப்பு!

சென்னை (11 ஜூலை 2021): பார்வையற்ற பெண் என்பதற்காக அவரது சாட்சியத்தை புறம்தள்ள முடியாது என்பதாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம் குற்றவாளியின் சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், எம்.சி.ஏ. படித்து வந்துள்ளார். பார்வையற்றவர்களுக்கு சென்னை வில்லிவாக்கம் பள்ளி ஒன்றில் இலவசமாக சங்கீத பயிற்சி வழங்குவதை கேள்விப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் சென்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் அன்புச்செல்வன்…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் திடீர் திருப்பம் – நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!

சென்னை (29 ஜூன் 2021): “நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது!” என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும்,…

மேலும்...

ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள் – ரஜினிக்கு நீதிமன்றம் கண்டனம்!

சென்னை (14 அக் 2020): நடிகர் ரஜினிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூபாய் 6.50 லட்சம் சொத்து வரி செலுத்தக்கூறி சென்னை மாநகராட்சி, நடிகர் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மாநகராட்சியின் நோட்டீசை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று (14/10/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய…

மேலும்...

நோன்பு கஞ்சிக்கு அரசு அரிசி வழங்கக்கூடாது – இந்து முன்னணி நீதிமன்றத்தில் மனு!

சென்னை (24 ஏப் 2020): நோன்பு கஞ்சிக்காக அரிசி வழங்குவதை அரசு நிறுத்தக்கோரி இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது. ரம்ஜான் நோன்பு நாளை முதல் இந்தியா முழுவதும் தொடங்குகிறது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக அரசு, கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்கும் என தெரிவித்தது. அதன்படி, 2895 பள்ளிவாசல்களுக்கு 5440 மெட்ரிக் டன்…

மேலும்...

கொரோனா வைரஸ்லிருந்து பாதுகாக்க – நீதிமன்றத்தில் புதுவித மனு!

சென்னை (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக கை கழுவ அதிக தண்ணீர் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அனைவரும் அடிக்கடி சோப் அல்லது கைகழுவும் திரவம் போட்டு கைகளை கழுவ வேண்டும். அடுத்தவருடன் கைகுலுக்க வேண்டாம்….

மேலும்...

சிஏஏ போராட்டம் – சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை!

சென்னை (18 பிப் 2020): நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்காக மாறி பெண்கள் முன்னிலையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு தடை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மார்ச் 11 வரை போராட்டத்திற்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம் மத்திய,…

மேலும்...

ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே – உயர் நீதிமன்றம் ஆலோசனை!

சென்னை (04 பிப் 2020): ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே வாங்கலாம் என்ற சட்ட இயற்ற சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதித்தால் என்ன? நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன? தனிநபர் வாங்கும் 2வது வீட்டிற்கான பத்திரப்பதிவு, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் ஆகியவற்றை 2…

மேலும்...

நடந்த தேர்தல் ரத்து – மறு தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (24 ஜன 2020): நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலை ரத்து செய்த நீதிமன்றம் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஒத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23-ஆம் தேதியன்று நடத்தவும், மறு…

மேலும்...