கேரளா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து வருவோருக்கு தமிழக அரசு எச்சரிக்கை!
சென்னை (25 பிப் 2021): கேரளா, மராட்டியத்தில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுக்கு பின் மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாக மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது….
