பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் – உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!
இஸ்லாமாபாத் (04 ஏப் 2022): பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தானில் நேற்று இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி நிராகரித்தார். அதேவேளை இம்ரான்கான் கோரிக்கையை ஏற்று அங்கு அமைச்சரவை கலைக்கப்பட்டதால், புதிதாக விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அதே…