இஸ்லாமாபாத் (27 பிப் 2020): பாகிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் நட்வடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த அமைதி வழி போராட்டத்திற்கு எதிராக இந்துத்வாவினர் வன்முறையில் ஈடுபட்டதால் டெல்லி போர்க்களமாக காட்சி அளிக்கிறது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ட்விட்டரில் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது, யாராவது குறி வைத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என, எச்சரிக்கிறேன்.
இங்கு வசிக்கும் சிறுபான்மையினர் அனைவரும், இந்நாட்டின் குடிமக்கள்தான். அவர்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.