ஐஐடி மாணவர் கல்லூரி மடியிலிருந்து குதித்து தற்கொலை

Share this News:

மும்பை (17 ஜன 2022): மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) மாணவர் கல்லூரி வளாகக் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் 26 வயதுடைய இரண்டாம் வருட முதுகலைப் பயிலும் மாணவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் திங்கள் கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வளாக கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது.

அவரது தங்கும் விடுதியில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தக் குறிப்பில், தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்த மாணவர் கூறியுள்ளார். அவரது மரணத்திற்கு அவர் யாரும் பொறுப்பேற்கவில்லை என்று அந்தக் குறிப்பைக் குறிப்பிட்டு காவல்துறை கூறியது.

இது தொடர்பாக போவாய் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply