கேரளாவில் எச்ஐவி மருந்து மூலம் குணமடைந்த கொரோனா நோயாளி!

எா்ணாகுளம் (26 மார்ச் 2020): கேரளாவில் கொரோனா பாதிக்கப் பட்ட நோயாளிக்கு சோதனை முறையில் எச் ஐ வி மருந்து கொடுக்கப்பட்டு, அவர் தற்போது குணமடைந்துள்ளார். இதுகுறித்து எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பிரிட்டனைச் சோ்ந்த 19 போ், விடுமுறையைக் கழிப்பதற்காக மூணாறுக்கு வந்திருந்தனா். அவா்களில் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, எா்ணாகுளம்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 629 ஆக உயர்வு!

புதுடெல்லி (26 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 629 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 12 ஆக உயரந்துள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 629 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க வீட்டுக்குள் இருக்க வேண்டி அனைத்து மாநில அரசுகளும்…

மேலும்...

மனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி!

இஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அஃரிடியை பாராட்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில்” உண்மையில் மிக உண்ணதமான சேவையை செய்கிறீர்கள் அஃப்ரிடி. மனிதநேயமிக்க உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. உங்களுக்கு இறைவனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும். உலகில் அனைவருக்காகவும் நாம் பிரார்த்திப்போம்”…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 612 – பலி எண்ணிக்கை 12

புதுடெல்லி (25 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 612 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 12 ஆக உயரந்துள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 612 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க வீட்டுக்குள் இருக்க வேண்டி அனைத்து மாநில அரசுகளும்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்வு!

புதுடெல்லி (24 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

கொரோனா வைரஸ் : ஸ்பெயினில் ஒரே நாளில் 443 பேர் உயிரிழப்பு!

ஸ்பெயின் (25 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று வெகு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதில், ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 5,552 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலமாக…

மேலும்...

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

லண்டன் (25 மார்ச் 2020): பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் 71 வயதான பிரிட்டன் இளவரசர் சார்லஸும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

சென்னை (25 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் மேலும் புதியதாக 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்தவர். இவர்கள் 22-ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு சேலம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிச்சை அளிக்கப்பட்டு…

மேலும்...

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முழு தேர்ச்சி! – முதல்வர் உத்தரவு!

சென்னை (25 மார்ச் 2020): தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் முழு தேர்ச்சி அடைவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கு அனைத்துத் தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் 1 ஆம் வகுப்பு முதல்…

மேலும்...

கொரோனாவுக்கு ஒரே நாளில் 2000 பேர் உயிரிழப்பு!

பெய்ஜிங் (25 மார்ச் 2020): உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு ஒரே நாளில் 2000 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் பல உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த பதற்றம் இந்திய மக்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு செயல்படுத்தப்படுவதாக நேற்றிரவு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த 21 நாட்களில் மளிகை, காய்கறி, பால், இரைச்சி போன்ற அத்தியாவசிய கடைகள்…

மேலும்...