தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர்!

மெல்போர்ன் (21 பிப் 2021): ஆஸ்திரேலியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். ஆஸ்திரேலியா முழுவதும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ள. அதுகுறித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ‘நாளை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குகிறது….

மேலும்...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (21 பிப் 2021): இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,91,651 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் 11,667 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை…

மேலும்...

கோவிட் விதிமுறைகளை மேலும் நீட்டித்து பஹ்ரைன் உத்தரவு!

பஹ்ரைன் (19 பிப் 2021): புதிய மாறுபட்ட கொரோனா பரவலை தொடர்ந்து பஹ்ரைனில் கோவிட் விதிமுறைகளை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவகங்களுக்குள் உணவு பரிமாறுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. உட்புற உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் மூடப்படும். விளையாட்டு பயிற்சி 30 பேருக்கு மேல் செய்ய முடியாது. வீடுகள் மற்றும் தனியார் இடங்களில் 30 க்கும் மேற்பட்டவர்களின் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. உட்புற விளையாட்டு வகுப்புகளும் நிறுத்தப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட…

மேலும்...

ஆறடி இடைவெளி அவசியம் – காதலர் தினத்தில் போலீஸ் அதிரடி!

மும்பை (14 பிப் 2021): கோவிட் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறடி இடைவெளியுடன் காதலர் தினம் கொண்டாட மும்பை போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “தூரம் அன்பை வலிமையாக்குகிறது, உங்கள் காதல் முகமூடி மற்றும் ஆறு அடி தூரம் இதுவே எங்களுக்கு தேவை ” என்று மும்பை காவல்துறை ட்விட்டரில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. .

மேலும்...

கொரோனவை பரப்பும் நோக்கத்தில் சுற்றித் திரிந்த இளைஞர்கள் கைது!

அபுதாபி (14 பிப் 2021): அபுதாபியில் கோவிட் பாசிட்டிவ் ரிபோர்ட்டுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கொரோனாவுடன் வெளியில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ கிளிப்பில், தனது மொபைல் தொலைபேசியில் பெறப்பட்ட கோவிட் நேர்மறை சோதனை முடிவை எடுத்துக்காட்டுகிறார். அதேபோல இன்னொருவர் பொது இடத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். வீடியோ கிளிப்பைப் பார்த்த அதிகாரிகள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர்….

மேலும்...

கொரோனா பரவல் – பஹ்ரைனில் மசூதிகள் மீண்டும் மூடல்!

பஹ்ரைன் (10 பிப் 2021): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பஹ்ரைனில் இரண்டு வாரங்களுக்கு மசூதிகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பிப்ரவரி 11 முதல் நடைமுறைக்கு வரும். கோவிட் மீண்டும் பரவுவதை அடுத்து இந்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனில் நேற்று மட்டும் 719 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 323 பேர் வெளிநாட்டவர்கள். மேலும் கொரோனா பாதிப்பால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். . தற்போது, ​​6036 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 46…

மேலும்...

துபாயில் சிக்கித் தவிக்கும் சவூதி வாழ் இந்தியர்களுக்கு உதவ கோரிக்கை!

துபாய் (08 பிப் 2021): சவூதி செல்வதற்காக துபாயில் தனிமைப்படுத்தலில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவ மத்திய அரசு மூலமாக கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது கோவிட் தொற்றுநோயால் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு நேரடி விமானம் இல்லாததால் துபாய் வழியாக பலர் சவுதிக்கு சென்றனர். ஆனால் சவூதி அரேபிய மீண்டும் 20 நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் சவூதி அரேபியா விதித்த விமானத் தடை காரணமாக 14 நாட்கள் துபாயில் தனிமைப்படுத்தலுக்காகக் கழித்த…

மேலும்...

சவூதியில் அனைத்து பொழுது போக்கு நிகழ்வுகள் மற்றும் உணவகங்கள் மீண்டும் மூடல்!

ரியாத் (04 பிப் 2021): கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அடுத்த 10 நாட்களுக்கு சவூதி அரேபியாவில் அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் மற்றும் உணவகங்களையும் நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, வியாழக்கிழமை (பிப் .4), இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும். பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றும் உலகின் சில நாடுகளைத் தாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையை…

மேலும்...

குவைத்தில் அனைத்து உணவகங்கள் கடைகள் மூடல்!

குவைத் (04 பிப் 2021): கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக குவைத்தில் உணவகங்கள் மற்றும் கடைகள் இரவு நேரங்களில் மூட உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைவாக இருந்த நிலையில், மீண்டும் அது அதிவேகத்தில் பரவ தொடங்கியுள்ளது. இது மேலும் பரவாமல் தடுக்க வளைகுடா நாடுகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சவூதி அரேபியா இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினர் சவூதிக்குள் வர தற்காலிக தடை…

மேலும்...

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் சவூதி அரேபியாவிற்குள் நுழைய தற்காலிக தடை!

ரியாத் (02 பிப் 2021): சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நகர்வாக இந்தியா உள்ளிட்ட, 20 குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினர் சவூதி அரேபியாவிற்கு நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சவுதி பத்திரிகை நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பை மேற்கோள் காட்டி சவுதி கெசட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, சவுதிக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியல் விவரம்: அர்ஜென்டினா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,…

மேலும்...