
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் பல்டி!
வாஷிங்டன் (09 ஏப் 2020): இந்தியாவுக்கு மிரடல் விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார். “மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது. இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் இந்தியா, அமெரிக்காவுக்கு உதவும் வகையில் அந்த மருந்தின் ஏற்றுமதிக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது….