மனம் மாறி புனித மக்காவில் பிரபல தமிழ் நடிகை – கண்ணீருடன் பிரார்த்தனை – VIDEO

Share this News:

மக்கா (22 டிச 2022): பிரபல தமிழ் நடிகை மும்தாஜ் மனம் மாறி புனித மக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொண்டுள்ளார்.

திரைப்படங்களில் கோலோச்சிய நடிகை மும்தாஜ். டி.ராஜேந்தரின் மோனிஷா என் மோனாலிஷா என்ற படம் மூலம் அறிமுகமானார்.

இவர், விஜய் நடித்த குஷி, சத்யராஜூடன் மலபார் போலீஸ், லூட்டி பிரபுவுடன் பட்ஜெட் பத்மநாபன், மிட்டா மிராசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். அர்ஜூனுடன் வேதம், ஏழுமலை, தவிர் தமிழக முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

பல திரைப்படங்களில் நடித்திருக்கும் மும்தாஜ், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் மும்தாஜ் பலருடன் சுமூகமாக நடந்து கொண்டது பலராலும் பாராட்டப்பட்டது.

சினிமாவில் இருந்து ஒதுக்கி இருக்கும் மும்தாஜ், ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். மேலும் புனித மக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொண்ட மும்தாஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் இன்று மெக்காவில் இருக்கிறேன். அனைவருக்காகவும் இங்கு நான் பிரார்த்தனை செய்கிறேன். கடைசியாக இந்த பூமியில் எனக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு பயணம் செய்திருக்கிறேன். இந்த உற்சாகத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இருப்பினும் இதயபூர்வமான நன்றியை பகிர்ந்து கொள்கிறேன்

யா அல்லாஹ் எனது துஆவையும் ஏற்றுக்கொள், யாஅல்லாஹ் கெட்டதில் இருந்து அனைவரையும் காப்பாற்று, நாங்கள் செய்த அனைத்து தவறுகளை மன்னிப்பாயாக, அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தாருங்கள். அல்லாஹ் எல்லோருக்கும் இந்த தர்பார் நஸீபை தருவாயாக, தயவு செய்து எங்களை மன்னிப்பாயாக,” என்று கண்ணீருடன் பிரார்த்தனை செய்துள்ளார்.


Share this News:

Leave a Reply