சென்னை (24 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துகிறது என கூறி, அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பொதுமக்கள், எதிர் கட்சிகள், மாணவர்கள் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.