கொழும்பு (24 ஜன 2020): சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இணையத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை தடுப்பதற்காக இலங்கை கணினி Sri Lanka Computer Emergency Readiness Team என்ற பிரிவு Cyber security act என்ற சட்ட வரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான கூட்டம் ஒன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்றதுடன் தயாரிக்கப்பட்டுள்ள சட்டம் தொடர்பான ஆவணமும் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் சமூக இணையத்தளங்களில் அவதூறான பதிவுகள் மற்றும் தவறான கருத்துக்கள், வெறுப்புப் பேச்சுக்கள் பதிவு செய்யப்படுவதை தடுப்பதற்கும் அவ்வாறான பதிவுகளை உடனடியாக நீக்கிவிடுவதற்கான வழிமுறையும் இதன் நோக்கமாகும்.