நிஜாமாபாத் (19 ஜன 2020): அடுத்து ஒரு குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் என்ற சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு AIMIM தலைவர் அசதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார்.
நிஜாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உவைசி, “மோகன் பகவத் பேசியுள்ளது வெட்கக் கேடானது. இந்தியாவில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பலருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளது. ஆனால் முஸ்லிம்கள் எல்லாவற்றிலும் கட்டுப்பாடாகவே உள்ளனர். பகவத் முஸ்லிம்களை குறி வைத்தே இதுபோன்ற சட்டங்கள் இயற்ற வேண்டும் என்கிறார்.
இந்தியாவின் மிக முக்கிய பிரச்சனை மக்கள் தொகை அல்ல, வேலையின்மை. இதனை பகவத் மறந்தது ஏனோ. பல தற்கொலைகள் வேலையின்மையால் ஏற்பட்டுள்ளன என்பதை பகவத் உணர வேண்டும்” என்று உவைசி பேசியுள்ளார்.