திருச்சி (29 ஜன 2020): திருச்சி பாஜக நிர்வாகி படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாகஅதே பகுதியை சேர்ந்த முஹம்மது பாபு என்கிற “மிட்டாய் பாபு” என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இதனை தொடர்ந்து மிட்டாய் பாபு உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர்.
இந்த கொலையின் பின்னணியில் மதத்தை காரணம் காட்டி பாஜக தலைவர்கள் வதந்தி பரப்பி வந்தனர். ஆனால் இதில் மதம் காரணமல்ல என்று ஐ.ஜி.அமல்ராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.