பெரியார் விவகாரம் – ரஜினிக்கு எதிரான மனு வாபஸ்!

Share this News:

சென்னை (24 ஜன 2020): பெரியார் குறித்து பேசிய நடிகர் ரஜனிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை திராவிடர் விடுதலைக் கழகம் வாபஸ் பெற்றுள்ளது.

கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால், இவ்விவகாரம் மேலும் சர்ச்சையானது.

இந்நிலையில் பெரியார் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளரான உமாபதி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில். ரஜினிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக திராவிடர் விடுதலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply