ரஜினி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு!

Share this News:

சென்னை (27 ஜன 2020): நடிகர் ரஜினி சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ரஜினி, கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் இன்று நடக்கும் மத்திய அரசின் விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து மைசூருக்கு விமானத்தில் இன்று காலை ரஜினி புறப்பட்டார்.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டத கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 48 பயணிகளுடன் சென்னையில் இருந்த மைசூருக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.


Share this News:

Leave a Reply