முஸ்லிம்களுக்கு ஆதரவாக இதுவரை வாய் திறந்ததுண்டா? -ரஜினிக்கு சீமான் சரமாரி கேள்வி!

Share this News:

சென்னை (06 பிப் 2020): இந்திய இஸ்லாமியர்களுக்காக் இதுவரை வாய் திறந்ததுண்டா? என்று நடிகர் ரஜினிக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், நேற்று சென்னை, போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து சிஏஏ- என்ஆர்சி – என்பிஆர் உள்ளிட்டவைகள் குறித்து தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர், ‘முஸ்லிம்களுக்கு இந்த சிஏஏ சட்டம் மூலம் பெரிய அச்சுறுத்தல் இருக்கிறதா பீதி கிளப்பிட்டாங்க. அது தவறு. முஸ்லிம்களுக்குப் பிரச்னைனா முதல் ஆளா குரல் கொடுப்பேன்’ என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாரள் சீமான், தெரிவித்துள்ளதாவது:

, “இந்திய இசுலாமியர்களுக்கென்று ஒரு பிரச்சினையென்றால் முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன் என்கிறீர்களே..!

முன்னாள் குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமதுவின் குடும்ப உறுப்பினர்களது குடியுரிமையும், கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் இராணுவ வீரர் முகமது சனாவுல்லாவின் குடியுரிமையும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டால் அஸ்ஸாமில் பறிக்கப்பட்டுள்ளதற்குக் குரல் கொடுத்தீர்களா?

மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி, தாத்ரியில் இக்லால் எனும் முதியவரை இந்துத்துவ வெறியர்கள் அடித்தே கொன்றதற்குக் குரல் கொடுத்தீர்களா?

ஜெய்ஸ்ரீராம் எனக் கூறக்கோரி 15 வயது இசுலாமிய சிறுவன் உத்திரப்பிரதேசத்தில் காவிப்பயங்கரவாதிகள் எரித்துக்கொன்றதற்குக் குரல் கொடுத்தீர்களா?

காஷ்மீரில் ஆசீபா எனும் குழந்தை கோயிலுக்குள் வைத்துக் கூட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டதற்குக் குரல் கொடுத்தீர்களா?

அமீர்கான் போன்ற உச்சபட்ச திரை நட்சத்திரங்களே இசுலாமியர் என்பதால் அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது குரல் கொடுத்தீர்களா?

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *