திருச்சியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு – அதிர்ச்சியில் திருச்சி மாவட்டம்!

Share this News:

திருச்சி (26 மார்ச் 2020): திருச்சியில் 27 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. துபையில் இருந்து திருச்சி வந்த இளைஞருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த செவ்வாய்க்கிழமை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 18 ஆக இருந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் துபையில் இருந்து திருச்சி வந்த 24 வயதான ஆண் ஒருவருக்கு கரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை துபை, சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 640 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 14 பேர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனோ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைளிக்கப்பட்டது. இவர்களில் யாருக்கும் கரோனோ தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், வியாழக்கிழமை ஒருவருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சுட்டுரை பக்கத்திலும் உறுதி செய்துள்ளார்.

திருச்சி மாவட்டத்திலும் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


Share this News:

Leave a Reply