டாஸ்மாக் மூடல் – திறப்பதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு!

Share this News:

சென்னை (08 மே 2020): தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.இதனால் பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை எனவும் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முடக்கம் முடியும் வரை அதாவது மே 17ஆம் தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அதுவரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், முழு முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share this News: