சென்னை (27 ஜன 2020): நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற மோடியும் டாடியும் என்று தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆவடியில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, ” நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., பெரிய அளவில் வெற்றி பெற என் பிரசாரம் பெரிய அளவில் உதவியது. ஆனால் அது என்னுடைய வெற்றி இல்லை. அதற்கு காரணம் இருவர். ஒருவர் மோடி; மற்றொருவர் என் டாடி.
ஸ்டாலினின் பிரச்சாரம் ஒருபுறம் என்றால். பிரதமர் மோடி, மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்ததால், தமிழகத்தில் தோல்வி பாஜக கூட்டணி தோல்வி அடைந்தது” என்ரார்
மேலும் தமிழை ஒடுக்குவதற்கும், அதை மறக்கடிக்கும் வேலைகளில் தான் பழனிசாமி ஆட்சி கவனம் செலுத்துகிறது. என்றும் உதயநிதி பேசினார்.