கொழும்பு (20 ஜன 2020): இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையைத்தில் 9 பேரை போலீசார் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொழும்பு பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை தேசிய மற்றும் வெளிநாட்டு பிரயாணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விமான நிலையத்திற்குள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.