காபூல் (01 டிச 2022): ஆப்கானிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில், 16 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்
ஆப்கான் வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் மதரசா பள்ளி உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில், 16 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்; பல மாணவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆப்கானி குழந்தைகளும் பயமின்றி பள்ளிக்கு செல்ல உரிமை உண்டு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.