மெக்சிகோ (26 ஏப் 2020): கொரோனா என்ற பெயர் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்க கொரோனா பீர் என்ற பெயரில் உள்ள மதுபான நிறுவனம்தான் இப்போது செய்வதறியாமல் திணறி நிற்கிறது.
மெக்சிகோ தயாரிப்பான கொரோனா பீர, கொரோனா நோய்க்கும், அந்த நிறுவனத்தின் பீருக்கும் எந்த தொடர்புமில்லை என பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.
கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று பொருளாகிறது. அது போன்ற தோற்றத்தைக் கொண்ட வைரசுக்கு கொரோனா வைரஸ் என பெயர் சூட்டப்பட்டது இது பீர் தயாரிப்பு நிறுவனத்திற்கு பிரச்னை ஆகிவிட்டது. கொரோனா என்ற பெயரை இணையத்தில் தேடினால் கொரோனா பீர்தான் முதல் வரிசையில் நிற்கிறது. போதாதர்கு நெட்டிசன்களும் கொரோனா வைரஸுடன் கொரோனா பீருக்கு தொடர்பு இருப்பதாக பற்ற வைத்தனர்.
இந்நிலையில் கொரோனா வைரசுக்கு பெயரை மாற்றினால் இந்திய மதிப்பில் சுமார் 70 கோடி ரூபாயை தரத் தயார் என அறிவித்தது பீர் நிறுவனம்.. இது ஒருபுறம் இருக்க கொரோனா வைரஸுக்கு கோவிட் 19 என பெயர் வைக்கப்பட்டாலும் கொரோனா எல்லோர் மனதிலும் ஆணித்தரமாக பதிந்துவிட்டது. இதனை அடுத்து தற்போது அந்நிறுவனம் தனது தயாரிப்பை நிறுத்தி வைத்துள்ளது.
மனிதனின் வாழ்க்கைக்கு மதுவும் வைரஸும் கெடுதல்தான் என்கின்றனர் நெட்டிசன்கள்.