பீஜிங் (28 ஜன 2020): சீனாவில் பரவி வரும் வைரஸ் நோய் குறித்த பரபரப்பு படத்தை சீனா வெளியிட்டுள்ளது.
சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 81 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 2800 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
இதனிடையே, சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்களை நேற்று முதன்முதலாக வெளியிட்டுள்ளனர். வுஹான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.