கொரோனா பயங்கரம் – பலி எண்ணிக்கை 563 ஆக உயர்வு!

Share this News:

பீஜிங் (06 பிப் 2020):கொரோனா வைரஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோயால் சீனா தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. அங்கு சுமார் 28,000-பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வூஹான் நகர மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வரும் நிலையில், 2 புதிய தற்காலிக மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2666 பயணிகள், 1045 பணியாளர்கள் என 3700 பேருடன் டோக்கியோவில் இருந்து வந்த 2 கப்பல்கள் 2 வாரங்களாக சீனாவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் அடுத்து வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.


Share this News:

Leave a Reply