பிகில் ஏற்படுத்திய திகில் – நடிகர் விஜய் வீட்டில் விடிய விடிய சோதனை!

Share this News:

சென்னை (06 பிப் 2020): நடிகர் விஜய் வீட்டில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறையினர் சோதனை இன்றும் தொடர்கிறது.

நடிகர் விஜய் நேற்று நெய்வேலியில் நேற்று ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்தார். அப்போது அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயை கையோடு அழைத்து வந்து சென்னையில் அவரது இல்லத்தில் வைத்து சோதனை நடத்தினர். அது விடிய விடிய தொடர்ந்தது.

மேலும் இன்றும் சோதனை தொடர்கிறது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று (பிப்.,05) காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், ‘பிகில்’ படத்தில் நடித்த போது வாங்கிய சம்பளம் குறித்து விஜயிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள சினிமா பைனான்சியர் வீடுகளிலும் இன்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Share this News:

Leave a Reply