ரோம் (27 மார்ச் 2020): கொரோனாவின் கோரப் பசிக்கு இத்தாலியில் இதுவரை 8515 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று வெகு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இத்தாலி, இந்த கொரோனாவிற்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8215 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இத்தாலியில் உயிரிழந்தவர்களில் 31 மருத்துவர்களும் 67 பாதிரியார்களும் அடங்கும்.