மாஸ்கோ (04 ஜூலை 2021): உலகில் கொரோனா தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்த நாடு ரஷ்யா. ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி ‘ஸ்புட்னிக்’ பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா தொற்று மீண்டும் ருத்ர தாண்டவம் ஆடுகிறது. இன்று மட்டும் 25,142 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கடந்த 6 மாதங்களில் இது அதிகபட்ச பாதிப்பு மேலும் ஒரே நாளில் 663 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கது.
ரஷ்யாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 137,925. உலக அளவில் பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா, ரஷ்யாவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.