வாஷிங்டன் (13 மே 2020): செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறினார்.
வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்பிடம், வெய்ஜியா ஜியாங் (Weijia Jiang) என்னும் செய்தியாளர், அமெரிக்காவில் அன்றாடம் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும்போது உலகிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் இங்கு தான் நடைபெறுகின்றன என்று பரிசோதனையில் மற்ற நாடுகளோடு போட்டி போடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு எல்லா நாடுகளிலும் தான் மக்கள் இறக்கிறார்கள் என்று பதிலளித்த டிரம்ப், கோபமாக இது சீனாவிடம் கேட்க வேண்டிய கேள்வி என்றார். அமெரிக்காவில் பிறந்த சீனரான ஜியாங், தன்னிடம் மட்டும் டிரம்ப் இவ்வாறு கூறுவது ஏன்? என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்று பதிலளித்த டிரம்ப், அடுத்தடுத்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமலே புறப்பட்டு சென்றார்.