ஸ்பெயின் (29 மார்ச் 2020): கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார்.
கரோனா வைரஸின் (கொவைட்-19) தோற்றுவாயான சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானில் இருந்து பரவத்தொடங்கி அந்த வைரஸ், உலகம் முழுவதும் 199-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்குள்ளாவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அச்சத்தை அதிகப்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 25 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரழந்துள்ளனர். உலகம் முழுவதும் 30 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா(86) தெரசா பிரெஞ்ச் தலைநகர் பாரீஸில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா உலக நாட்டு தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை. ஸ்பெயினில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 235 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 982 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12 ஆயிரத்து 285 அந்த நோயில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.